அபார்ஷன் பண்ண சொன்ன பெற்றோர்.. குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடிய வாடகை தாய்.. நச்னு தீர்ப்பு தந்த கோர்ட்

  • நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. மனித உணர்வுகளுக்கும், சட்ட போராட்டங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கைதான் இந்த நீதிமன்ற வழக்கின் மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    கலிபோர்னியாவை சேர்ந்தவர் நௌஷீன் கில்கார்.. இவரது மனைவி பெயர் ஓமர் அகமது.. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. எனவே குழந்தை பாக்கியத்திற்காக அலாஸ்காவைச் சேர்ந்த மெக்கென்னா வெஸ்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்தனர்.

    Advertisement

    வாடகைத் தாய்

    சில நாட்களில் குழந்தை பிறந்துவிடும் என்று தம்பதியினர் உச்சக்கட்ட குஷியில் காத்திருந்தனர்.. அப்போது திடீரென வெளியான ஒரு மெடிக்கல் டெஸ்ட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது கருவில் வளரும் குழந்தைக்கு "ஹைபோபிளாஸ்டிக் லெப்ட் ஹார்ட் சின்ட்ரோம்" என்ற மிக அரிய வகை இதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

    குழந்தைக்கு தீவிர நோய் பாதிப்பு இருப்பதால், அதனை வளர்ப்பது கடினம் என்ற கூறி பெற்றோர் கருவைக் கலைக்க வற்புறுத்தியிருக்கிறார்கள்.. ஆனால் வாடகைத் தாய் மெக்கென்னா-வுக்கு இந்த குழந்தையை கலைக்க விருப்பமில்லை.. தன் வயிற்றில் வளரும் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்..

    Advertisement

    கேபிரியல் குழந்தை

    அதனால் டெக்சாஸ் காமாணத்துக்கு தப்பி சென்றார்.. காரணம், அங்குதான் அவசர மருத்துவ வசதிகளும், பிறக்காத குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களும் அதிகம் உள்ளன.. எனவே, டெக்சாஸ் மாகாணத்திற்குத் தப்பி சென்ற வாடகைதாய், குழந்தையை பத்திரமாக பெற்றுவிட வேண்டும் என்பதில் கவனமாகவும், பதற்றத்துடனும் இருந்தார்.. இறுதியில் டல்லாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.. அந்த குழந்தைக்கு கேப்ரியல் என்று பெயரிட்டார்.

    குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருப்பதை பார்த்ததுமே, அதன் உயிரியல் பெற்றோர்கள் பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்கள்.. வாடகைத்தாய் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சொல்கிறார்.. குழந்தையைக் கைவிடும் எண்ணம் தங்களுக்கு துளியும் இல்லை.. அவசர மருத்துவ சிகிச்சையே தங்களின் முதல் இலக்கு என்றனர்..

    Advertisement

    கரங்கள் கட்டப்பட்டுவிட்டன

    ஆனால், பிரபல ஊடகவியலாளர் மெகின் கெல்லியின் நிகழ்ச்சியில் பேசிய வாடகைத் தாய் மெக்கென்னா, "வாடகைத் தாய் ஒப்பந்தத்தால் என் கரங்கள் கட்டப்பட்டுவிட்டன.. அப்படியிருந்தும் என் மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து இந்த உயிரை பாதுகாக்கவே நான் போராடுகிறேன்" என்று உருக்கமாக பேசியிருந்தார்.

    இந்த விவகாரம் அம்மாகாணத்தில் அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.. உடனே மாநில அட்டர்னி ஜெனரல் கென் பாக்ச்டன் இதில் நேரடியாக தலையிட்டார்.

    குழந்தையின் உயிரைக் காக்க உடனடியாக தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோர்ட்டில் ஸ்பெஷல் ஆர்டரை பெற்றார். ஆனால், உயிரியல் பெற்றோரோ, அட்டர்னி ஜெனரலும் வாடகைத் தாயும் சேர்ந்து அரசியல் நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்" என்று கோர்ட்டில் வாதிட்டனர்.

    Advertisement

    அதிர்ந்த வாடகைத் தாய்

    2 தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வாடகைத் தாயின் கோரிக்கையை நிராகரித்து, குழந்தையின் முழுக் காவல் உரிமையையும் உயிரியல் பெற்றோரிடமே ஒப்படைத்து உத்தரவிட்டது. பெற்றோரின் பராமரிப்பில் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதைக்கேட்டு அதிர்ந்து போன தாய், குழந்தையைப் பெற்றெடுத்த தாய் என்ற அடிப்படையில் தனக்கே முழு உரிமை உண்டு என்று கதறி கொண்டிருக்கிறார்.. இதுகுறித்து அப்பீல் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்...

    குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பமாகி உள்ளது என்றாலும், வாடகைத்தாய் குழந்தை பேக்ரயரல காணாமல் தவித்து கொண்டிருக்கிறாராம்...!!

    யார் மீது தவறு?

    இந்த விவகாரத்தில் யார் மீதும் முழுமையாகத் தவறு சொல்ல முடியாது... ஒரு உயிரைக் காப்பாற்றத் துடித்த வாடகை தாயின் தாய்ப்பாசம் உணர்ச்சிப்பூர்வமாக நியாயமாக இருந்தாலும், அவர் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டது சட்டப்படி தவறாகவே பார்க்கப்படுகிறது;

    Advertisement

    இன்னொருபக்கம், குழந்தைக்குள்ள இதயக் கோளாறை சுட்டிக்காட்டி கருக்கலைப்பு பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், குழந்தை பிறந்ததும் அதை ஏற்றுக்கொண்டு தீவிர சிகிச்சை அளித்து வரும் உயிரியல் பெற்றோரின் சட்டப்பூர்வ உரிமையையே நீதிமன்றமும் முதன்மையாகக் கருதியுள்ளது...!!

    English Summary

    Surrogate Mother Told to Abort Baby.. She Ran Away With the Child, Then Court Gave a Shock Verdict