தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை


சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்று விற்பனையாகிறது. எனவே நேற்றைய உச்சத்தோடு தொடருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.05காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நேற்றைய விலையாகும். இன்றும் இந்த விலை தொடர்ந்து அமலில் உள்ளது.

இதனிடையே மக்கள் நலனுக்காக மாநில அரசு விதிக்கும் வரியை மேற்கு வங்கத்தின் மமதா பானர்ஜி அரசு குறைத்துக்கொண்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.

இதனிடையே, பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்திற்கு எதிராக டெல்லி ஹைகோர்ட்டில், டிசைனர் ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. பெட்ரோல் அத்தியாவசிய பொருள் என்பதால், விலைவாசியை குறைக்க நீதிமன்ற தலையீடு அவசியம் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Petrol, Diesel price unchanged today, says oil companies.