பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை..எப்போது விலை குறையும்? மக்கள் எதிர்பார்ப்பு
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் தொடர்ந்து 300வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் எப்போது விலை குறையும் என்று வாகன ஓட்டிகளும் பொது மக்களும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை
கடந்த மே 21ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினம் முதல் பெட்ரோல் டீசல் விலை 300வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இன்றைய விலை நிலவரம்
சென்னையில் கடந்த 300வது நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாகவும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்கிறது. அதற்குக் காரணம் டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 116 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, கடந்த ஜனவரி மாதம் 82 டாலர்களாகக் குறைந்தது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடு செய்து வருவதாகத் தெரிகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நாம் இந்திய ரூபாய் மதிப்பில் அதிகமாகச் செலவிட வேண்டி உள்ளது. உள்ளூர் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

விலையை குறைக்க வேண்டும்
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரிக்கட்டிக் கொள்ளும் பணியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டதாக கடந்த ஜனவரி மாதம் கூறினார்.

விலை குறையுமா
எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறி இரண்டு மாதங்கள் ஆகியும் விலையை குறைக்க முன்வரவில்லை. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை 300வது நாட்களாக உயராதது மன நிம்மதியை அளித்தாலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications