இப்போதாவது விஜய் கரூர்க்கு செல்வாரா? இனி அரசு பாதுகாப்பு தரலனு சொல்ல முடியாதே.. திமுகவினர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னணியில் உள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கரூருக்கு சென்று விஜய் சந்திக்கவில்லை. மாறாக பாதிக்கபட்ட குடும்பத்தினரை தனியார் பேருந்து மூலம் மகாபலிபுரம் அழைத்து வந்து அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

TVK Vijay Results

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் ஆளும் அரசு தமக்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றும், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தான் எங்கும் செல்லவில்லை என்றும் கூறி வந்தார். ஆனால் தற்போது விஜய் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் விஜய் தற்போது கரூருக்கு முதல் பயணமாக சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பார்ப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. விஜய் ஒருவேளை முதலமைச்சராக பதவி ஏற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வருவாரா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால் இனி அவர் வீட்டிலேயே இருக்க முடியாது என்றும், மக்களை அதிக அளவு வந்து சந்திக்க வேண்டும் என்றும் திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் முன்பு எல்லாம் விஜய் எல்லாம் திமுகவின் சதி என்று கூறி காலத்தை ஓட்டி வந்தார்.

தற்போது ஆட்சியை அவரிடம் இருக்கும் பட்சத்தில் இப்போதும் திமுக மீது குறை சொல்ல முடியாது என்றும் அவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் முதலமைச்சராக ஒருவேளை விஜய் பொறுப்பேற்றால் அவருடைய முதல் பயணம் கரூருக்காக தான் இருக்கும் என்றும் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+