தேனி சின்னவாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கைகளாலேயே குப்பை அள்ளிய கம்பம் எம்எல்ஏ ஜெகநாத்!

  • தேனி: தேனி மாவட்டம், கம்பம் - சுருளிப்பட்டி சாலையில் உள்ள சின்ன வாய்க்கால் குப்பைகள் மற்றும் கழிவுகளால் மாசடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

    Advertisement

    அவருடன் கம்பம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் இணைந்து வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினர்.

    Advertisement

    முல்லைப் பெரியாறு பாசன நீர் இந்தச் சின்ன வாய்க்கால் வழியாகச் சென்று வீரப்ப நாயக்கன் குளத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர் பயன்படுகிறது.

    இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகச் சின்ன வாய்க்காலில் பழைய துணிகள், மதுபாட்டில்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய போர்வைகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டு வந்தன. இதனால் வாய்க்காலில் கழிவுகள் தேங்கி, தண்ணீர் கருமை நிறமாக மாறியதுடன், கடும் துர்நாற்றமும் வீசியது.

    இந்த சின்ன வாய்க்கால் பகுதி கம்பம் சட்டமன்ற தொகுதியை ஒட்டிய ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.

    Advertisement
    கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா சாப்பிட்டது ரீல்ஸ் தோசையா? இறுதியில் பெரிய ட்விஸ்ட்

    இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவிடம் புகார் தெரிவித்தனர்.
    தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நேற்று காலை நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாய்க்காலில் இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

    கூடைகளில் குப்பை

    வாய்க்கால் தண்ணீரில் இறங்கி கூடைகளைக் கொண்டு தேங்கி இருந்த கழிவுகளை அப்புறப்படுத்தி டிராக்டர் மூலமாக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அகற்றினார். மேலும் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இதுகுறித்து ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. கூறியதாவது: சின்ன வாய்க்கால் என்பது எனது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்த இடமாகும். ஆனால், இன்று அந்த வாய்க்கால் மாசடைந்து கிடப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

    வாய்க்கால் சுத்தம்

    வாய்க்காலைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வாய்க்காலில் தேங்கியுள்ள அசுத்தமான நீரைக் கால்நடைகள் பருகுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    நீர்நிலைகள்

    இதனைத் தடுப்பதுடன், நீர்நிலையைப் பாதுகாக்கும் நோக்கிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளோம். வாய்க்காலில் இறங்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசுகிறது. இருப்பினும், பொதுமக்களின் நலன் கருதி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோம்.

    Advertisement
    விஜய்யால் மொத்த கட்சியும் காலி.. தவெக உடன் இணைந்த புதிய கட்சி.. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா விளக்கம்

    வாய்க்கால் கம்பம்

    மேலும் இந்த வாய்க்காலில் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் கொட்டப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

    கழிவுகள் கொட்டக் கூடாது

    மேலும் சுத்தம் செய்யப்பட்ட வாய்க்காலில் மீண்டும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாய்க்காலைத் தொடர்ந்து பராமரிக்கவும், அதில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Advertisement

    இந்த பணியின் போது அவருடன் தமிழக வெற்றிக்கழகத்தைச் சார்ந்தவர்களும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.

    English Summary

    Kambam MLA Jeganath Misra cleaned the Chinna vaaikaal canal for the welfare of the people. He himself did clean drive with sanitary workers.