பேஸ்புக் பதிவை 'ஷேர்' செய்தால் திருப்பதி லட்டு.. தமிழக இளைஞரை தேடும் திருமலை தேவஸ்தானம்

  • திருப்பதி: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிட்ட வீடியோ அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தனது பேஸ்புக் பதிவை 'ஷேர்' மற்றும் 'லைக்' செய்தால் திருப்பதி லட்டு இலவசமாக தருவதாக கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் கவனத்திற்கு விஷயம் போனது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் எல்லாருக்குமே உடனே நினைவுக்கு வருவது திருப்பதி லட்டு தான். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் பல ஆண்டுகளாக பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த திருப்பதி லட்டு, திருப்பதியை தவிர எங்குமேகிடைக்காது. அவ்வளவு விஷேசமானது. இதனை அவ்வளவு எளிதாக வெளியில் யாருமே வாங்கிவிடவும் முடியாது.

    Advertisement

    திருப்பதி லட்டு சாதாரண உணவுப்பொருளாக அல்லாமல். ஏழுமலையானை தரிசித்த பின்னர் பக்தர்கள் பக்தியுடன் பெற்று செல்லும் புனித பிரசாதமாகும். இந்த லட்டை வெளியில் யாராலும் தயாரித்து விற்க முடியாது. ஏனெனில் இதன் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் அனைத்தும் திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வெளியிட்டுள்ள முகநூலில் வெளியிட்ட வீடியோவில், தனது முகநூல் வலைதளப்பதிவை விரும்பி, மேலும் 30 பேருக்கு ஷேர் செய்யும் நபருக்கு 30 திருப்பதி கோவில் லட்டுகள் இலவசமாக வழங்குவதாக கூறியிருந்தார். மற்றொரு வீடியோவில், தனது சேனலை பின்தொடர்பவர்கள் மற்றும் வீடியோவுக்கு லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு லட்டு பெட்டிகளில் அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

    Advertisement

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை புன்படுத்தியது. பலரும் தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினார்கள். புனிதமான திருப்பதி லட்டு பிரசாதத்தை சமூக வலைதளப் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கே.வி.முரளிகிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் உண்மைகள் தெரியவந்த பிறகு, தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருமலையில் லட்டு பிரசாதம் வழங்குவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளும், வரம்புகளும் இருக்கிறது. ஒருவர் காசுகொடுக்கிறார் என்பதற்காக அதிக எண்ணிக்கையில் நேரில் கூட போய் வாங்கிவிட முடியாது. இப்படியான சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகத்துக்கு அதிக எண்ணிக்கையிலான லட்டுகள் எவ்வாறு கிடைத்தது. வீடியோவில் காட்டப்பட்டுள்ள லட்டுகள் உண்மையில் திருப்பதி லட்டு பிரசாதமா? திருமலையில் இருந்து பெறப்பட்டவையா? அல்லது வேறு வழியில் வாங்கியதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    A video posted by a person from Tamil Nadu with the aim of boosting his Facebook page's reach has landed him in serious trouble. He had released the video promising to give away free Tirupati *laddus* to anyone who 'liked' and 'shared' his Facebook post.