தூத்துக்குடி புதிய அனல் மின்நிலையங்களால் மின் கட்டணம் உயரும்.. தனியார் அமைப்பின் ஆய்வு கூறுவது என்ன

  • தூத்துக்குடி : தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் 2 புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையங்களால் மின் கட்டணம் உயரக்கூடும் என தனியார் அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பு எப்படி மின்கட்டணம் உயரும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை பட்டியலிட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய தூத்துக்குடியில் 2 புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் அரசுக்கு இரவு நேரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின்கட்டணச் செலவுகள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.மறுபக்கம் மாநில மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக இருக்கிறது.

    Advertisement

    இந்தசூழலில் புதிய நிலக்கரி மின் நிலையங்களை அமைப்பது மின்சார கட்டணத்தை மேலும் உயர்த்தும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறுகையில், "தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள தலா 800 மெகாவாட்டில் 2 அனல்மின் நிலையத்தின் மின்சாரம், 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தை விட ஏறக்குறைய இருமடங்கு விலை உயர்ந்ததாக இருக்கும்.

    புதிய அனல்மின் நிலையங்களின் மின்சார உற்பத்தி செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.4 வரை இருக்கும். இதற்கு மாறாக, அதே அளவு மின் உற்பத்தியை 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பெற்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே செலவாகும். எனவே தூய்மையான புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி முறையை பயன்படுத்துவது, தூத்துக்குடியில் மாசுபாட்டையும் தடுக்கும்.

    Advertisement

    முன்மொழியப்பட்ட திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முதல் ஆண்டில் ரூ.4,120 கோடியும், முதல் 5 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடியும் நிலையான செலவுகளாக செலுத்தும் கட்டாயத்தில் மின்சார வாரியம் சிக்கிக்கொள்ளும். மாநில மின் விநியோக அமைப்பு எதிர்கொள்ளும் நிதிச்சிக்கல்களுக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

    உங்கள் வீட்டு மின் கட்டணம்.. கரண்ட் பில்லை நீங்களே மொபைலில் உருவாக்கலாம்.. மின்வாரியம் விளக்கம்

    திட்டமிடப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின்சாரத்திற்கு பதிலாக 9,067 மெகாவாட் பேட்டரி சேமிப்புடன் கூடிய 3,490 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தலாம். இதற்கு மொத்த மூலதன செலவு ரூ.27,289 கோடி தேவைப்படும். பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தை தேர்ந்தெடுப்பது மாநில கருவூலத்திற்கும், சாதாரண நுகர்வோருக்கும் சேமிப்பை அளிக்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement
    கொடைக்கானல் - தேனி சாலை துண்டிப்பு.. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையின் நிலை என்ன?

    அரசின் இந்த திட்டங்களால் மின்வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை வரலாம். அதேபோல் புதிய நிலக்கரி மின் நிலையங்களுக்காகக் கடன் மற்றும் நிலையான செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலையும் ஏற்படும், அதனால் கடுமையான நிதிச்சுமை ஏற்படும். தொடர்ந்து அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில்தாங்க முடியாத நிலை வந்தால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும்.

    English Summary

    Electricity tariffs will rise due to the new thermal power plants in Thoothukudi – what does a study by a private organization say?