தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! சென்னை – ராமநாதபுரத்திற்கு புது அதிகாரிகள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று அதிரடியாக 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள், ராமநாதபுரம் எஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

IPS officers

* எஸ்பி அந்தஸ்தில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காலிப்பணியிட ஒதுக்கீட்டில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரி கிரண் பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றி வரும் சந்தேஷ், சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த முத்துகுமார், சென்னைஆவடி போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை ஆவடி போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ஈஸ்வரன், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+