கடலை மிட்டாய் இருக்கு.. கேக் எதுக்கு? குழந்தைகளுக்கு ஸ்வீட்.. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை!

  • தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், சத்துள்ள, சுவைமிக்க புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவ. 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    Advertisement

    இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 61 லட்சத்து 84,566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான குறுகிய கால டெண்டர் அறிவிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேக்கிற்குப் பதிலாக புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க வேண்டும் என்றும், கேக் வழங்குவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Chandrababu Naidu: பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்திற்கு நீர் வழங்குவோம்..விஜய் மீட்டிங்கில் அறிவித்த சந்திரபாபு நாயுடு
    Advertisement

    இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகள் தினத்தன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது என்று தமிழக அரசு அறிவித்த அறிவிப்பினை வரவேற்கிறோம்.

    மாணவ, மாணவிகளே ரெடியா? 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

    ஆனால், கேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பு எங்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஏற்கனவே சத்துணவு மற்றும் காலை உணவுத் திட்டத்தில் சத்துள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

    Advertisement

    இந்த நிலையில், குழந்தைகள் தினத்தன்று கேக் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். அவ்வாறு அறிவித்தால் எங்களுக்கும், எங்களது தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மேலும் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்.

    கோவில்பட்டி கடலை மிட்டாயில் தற்போது முருங்கைக்கீரை கடலை மிட்டாய், நாட்டுச் சோளம் கடலை மிட்டாய், நவதானிய கடலை மிட்டாய் எனச் சத்தான பல்வேறு வகையான கடலை மிட்டாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். இதற்கான வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார். தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    English Summary

    Kovilpatti peanut candy manufacturers urge Tamil Nadu to distribute GI-tagged traditional sweets instead of sponge cakes to schoolchildren on Children's Day.