"ராகுல் காந்தியின் அண்ணன்" இறந்தது எப்படி? முதல் குழந்தை பற்றி கலங்கிய சோனியா காந்தி! உருக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சோனியா காந்தி - ராஜீவ் காந்தி தம்பதிக்கு பிறந்த முதல் ஆண் குழந்தை இறந்தது எப்படி? ராகுல் காந்தியின் அண்ணனுக்கு மருத்துவமனையில் என்ன நேர்ந்தது? என்பது பற்றி சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.

belonging-a-journey-of-love-sonia-gandhi-recalls-losing-her-first-child

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் 'Belonging: A Journey of Love' என்ற புத்தகம் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த புத்தகத்தில் சோனியா காந்தி தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசிய விஷயங்கள் மற்றும் சோகமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

புத்தகத்தில் சோனியா காந்தி தனது முதல் ஆண் குழந்தை பற்றியும், அந்த குழந்தை பிறந்த சில மணிநேரத்தில் இறந்தது பற்றியும், அந்த குழந்தையை அடக்கம் செய்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி - ராகுல் காந்திக்கு பிறந்த முதல் குழந்தை பற்றிய விவரத்தையும் சோனியா காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

''நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தபோது நானும், ராஜீவ் காந்தியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததோம். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தது. எனது மாமியார் இந்திரா காந்தியும் மகிழ்ச்சியடைந்தார். இந்த செய்தியை கேட்டதும் இந்திரா காந்தி என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

விளையாட்டாக "ஒரு பெரிய குழந்தை, இன்னொரு குழந்தையை பெற்றெடுக்க போகிறது" என்று கூறினார். அவர் வெளிநாட்டில் இருந்த அவரது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், ''உங்களிடம் ஒரு ரகசியத்தை சொல்லட்டுமா? ஏப்ரல் மாதம் நான் பாட்டியாக போகிறேன். நாங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது எனக்கு சந்தோஷத்தை தந்தது. ஆனாலும் என்னை பெரிய குழந்தை என்று இந்திரா காந்தி கூறியதால் நானும் குழந்தை போல் தான் நடந்து கொள்கிறேனா? என்று ராஜீவிடம் கேட்டு வருத்தப்பட்டேன். அப்போது ராஜீவ், அது அன்பின் மிகுதியால் சொல்லப்பட்ட வார்த்தை என்று எனக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் என்னால் முழுமையாக அதனை ஏற்க முடியவில்லை.

இந்திரா காந்தி எனக்கு கர்ப்பகால உணவு முறை பற்றி அறிவுரைகளை வழங்கினார். உடற்பயிற்சி, நடைப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி கூறினார். குழந்தைக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்ற பட்டியலையும் தயாரித்தார். பணியாளர் குழுவில் இருந்த ஏமி ஆண்ட்டியிடம், மிக மென்மையான மஸ்லின் துணியை கண்டறிந்து குழந்தைகளுக்கான 'நேபி' துணியை தைக்க அறிவுரை வழங்கினார். வாரம் 3 நாள் கீரை சாப்பிடவும், தினமும் இரண்டு பெரிய டம்ளரில் பால் குடிக்க வேண்டும் என்று இந்திரா காந்தி அறிவுறுத்தியிருந்தார். கீரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் மாமியார் சொல்லை தட்ட முடியவில்லை.

என்னுடைய கர்ப்பத்தின் 7 மாத தொடக்கத்தில் ஒருநாள் காலையில் எனக்கு அசவுகரியம் ஏற்பட்டது. அடிவயிற்றில் வலி ஏற்பட்டது. டாக்டர் வரவழைக்காட்டார். அவர் ஓய்வெடுக்கும்படி கூறினார். மறுநாள் வலி அதிகரித்தது. இதனால் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். 1969-ஆம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 7 வது மாதத்திலேயே குழந்தை பிறந்தது. பிரசவம் சுக பிரசமாக இருந்தாலும் குறிக்கப்பட்ட நாளை விட 3 மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது.

குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. அப்போது தான் குழந்தை அழுதது. ராஜீவ் தான் குழந்தையை என்னிடம் காட்டினார். குழந்தையை பார்க்க என்னை அழைத்து சென்றார். குழந்தை மிகவும் சிறியதாக, நல்ல தேகத்துடன், அடர்த்தியான கருங்கூந்தலுடன் இருந்தது. நாங்கள் அவனை பார்த்தவுடனேயே அன்பை காட்ட தொடங்கிவிட்டோம்.ஆனால், அவன் உயிர் பிழைப்பதில் சந்தேகம் இருப்பதாக ராஜீவிடம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. அதிகாலை 6:30 மணிக்கு அவன் உயிர் பிரிந்தபோது, ஏமி ஆன்ட்டி அருகில் இருக்க, ராஜீவ் மெதுவாக என்னிடம் அந்தச் செய்தியை சொன்னார். இதை கேட்டவுடன் நான் ''இல்லை.. இல்லை.. இப்படி நடக்கவே கூடாது. ஏன்? ஏன்? என்று கதறினேன்.

நானும் ராஜீவும் அதிர்ச்சியில் உறைந்ததோம். இருவரும் தேற்ற முடியாத அளவுக்கு அழுதோம். இந்திரா காந்தி, தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு உடனடியாகத் திரும்பி வந்தார். இரவு 11:30 மணிக்கு வந்த இந்திரா காந்தி என்னையும், ராஜீவையும் அணைத்து கொண்டு எங்களுடன் நீண்டநேரம் அமர்ந்திருந்தார். அவரது கண்கள் அழுது சிவந்து வீங்கியிருந்தன. எங்களுடன் இருக்க இந்திரா காந்தி விரும்பினாலும் கூட தனது கடமைகளை முடிக்க வேண்டும் என்பதால் மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்து பாரம்பரியப்படி பிறந்த குழந்தை இறந்தால் எரிப்பதற்கு பதில் ஆற்றில் விட்டுவிடுவார்கள் என்று ராஜீவ் காந்தி கூறினார். அதேபோல் குழந்தையை இடுகாட்டில் அடக்கம் செய்வதிலும் சிக்கல்கள் இருந்தன. அருகே இருந்த கிறிஸ்தவ இடுகாட்டில் அடக்கம் செய்தால் அது மதரீதியாக சர்ச்சையை கிளப்பும். இதனால் அதனை மறுத்தேன். அதேபோல் குழந்தையை ஆற்றில் விடுவதை நான் முற்றிலுமாக மறுத்துவிட்னே். இதையடுத்து சஞ்சய் காந்தி - ராஜீவ் காந்தி ஆகியோர் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். மெஹ்ராலியில் இருந்த தங்கள் தந்தையின் பண்ணையில் குழந்தையை அடக்கம் செய்தனர்'' என உருக்கமாக கூறியுள்ளார்.

பிறகு 1969ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோனியா காந்தி மீண்டும் கர்ப்பமானார். அதன்பிறகு 1970ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சோனியா காந்தி - ராஜீவ் காந்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அவர் தான் ராகுல் காந்தியாகும். பிறகு இந்த தம்பதிக்கு பிரியங்கா காந்தி என்ற மகளும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+