அனில் குட்டி உயிரை காத்த மதுரை தம்பதி.. தீபாவளியன்று வீட்டு வாசலில் நடந்த அந்த சம்பவம்.. எப்படி?
மதுரை: மதுரையில் தீபாவளி பண்டிகையின் போது வீட்டிற்குள் சுற்றித் திருந்த அணிலுக்கு காயம் ஏற்பட்டதால், அதனை கவலையுடன் அரசு கால் நடை மருத்துவமனைக்கு ஒரு தம்பதி கொண்டு வந்தது கவனம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தீபாவளி அன்று வந்ததால், அந்த அணிலுக்கு தீபாவளி என்று பெயர் வைத்துள்ளனர்.
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது - ஜீனத் தம்பதியினர் தீபாவளியன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது காலை உணவுக்கு பின் வீட்டில் இருந்தபோது திடிரென வீட்டிவாசலில் பிறந்த சில நாட்களே ஆன குட்டி அணிலை பூனை தூக்கிவந்து போட்டுள்ளது. இதனை பார்த்து தம்பதியினர் அணிலை பக்குவமாக கையில் எடுத்து பசும்பால் கொடுத்து பசியாற்றி இருக்கின்றனர்.

தீபாவளி நாளில் வந்த விருந்தாளி என்பதால் தீபாவளி என பெயர் சூட்டி குடும்பத்தோடு அழைத்துள்ளனர். இதையடுத்து கண் விழிக்காமல் இருந்த அணிலானது உணவுக்கு பின் கண்விழிக்க தொடங்கியபோது அணில் குட்டியின் முன்புறம் உள்ள வலது கால் ஒன்றில் சிறிய அளவிற்கு காயம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால் குட்டி அணிலால் நடக்க முடியாமல் தவித்து வந்ததை பார்த்து கவலையடைந்த தம்பதியினர் தல்லாகுளம் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். குட்டி அணில் காயமடைந்தது குறித்து பரிசோதித்த மருத்துவர் அதற்கான காயம் குறைவதற்கான சிரப் வழங்கினர்.
பின்னர் குட்டி அணிலுக்கு பசும்பால் ஊட்டும் முறை குறித்தும் ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பெரிய அளவிற்கு காயம் என்பதால் நிம்மதியடைந்த தம்பதியினர் தாங்கள் கொண்டுவந்த அணில் குட்டியை மகிழ்ச்சியோடு எடுத்து சென்றனர். இதுகுறித்து தம்பதி பேசுகையில், தீபாவளியன்று வீட்டுவாசலில் பூனை ஒன்று கவ்வியபடி அணில் குட்டியை எடுத்து வந்தது.
அப்போது அதனை வீட்டிற்குள் தீபாவளியன்று வந்த விருந்தாளி என மகிழ்ச்சியோடு எடுத்து பசும்பால் வழங்கினோம். இதற்கு தீபாவளி என பெயர் சூட்டினோம். நேற்று காலில் நடக்க முடியாமல் தவித்தபோது அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். மருத்துவர்கள் நன்கு பரிசோதித்து அனுப்பி வைத்தனர். இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் கால் சரியாகும் என நம்புகிறோம் என்றனர்.


Click it and Unblock the Notifications
