யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டருகே நள்ளிரவில் மாந்திரீக பூஜை? நாற்காலி வீசி தாக்குதல்! CCTV-ல் ஷாக்!

  • தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அருகே யூடியூபர் ஜி.பி.முத்துவின் வீட்டு முன்பு எதிர்தரப்பினர் மாந்திரீக பூஜை நடத்தியதாக கிடைத்த தகவலின்பேரில் ஜி.பி. முத்து குடும்பத்தினர் தட்டி கேட்ட போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    ஜிபி முத்து என்பவர் பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் பிரபலமடைந்தவர். யூடியூபர், திரைப்பட நடிகராகவும் உள்ளார். இவரது இயற்பெயர் கணேசன் பேச்சிமுத்து.

    Advertisement

    இவர் ஆரம்பத்தில் மரவேலை செய்து வந்த நிலையில் டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவருக்கு வரும் கடிதங்களை இவர் வாசிப்பது நகைச்சுவையாக இருக்கும் என்பதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    அது போல் இவரது தமிழ் உச்சரிப்புக்கும் ரசிகர்கள் உள்ளனர். கடிதத்தில் ரசிகர்கள் எழுதியிருக்கும் ஏடாகூட கேள்விகளுக்கு ஜிபி முத்து கோபத்துடன் அளித்திருக்கும் பதில் காமெடியாக இருக்கும்.

    இவர் ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார். மேலும் கடை திறப்பு விழா, விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் Home sick காரணமாக அவராகவே வெளியேறினார்.

    Advertisement

    இவர் ஓ மை கோஸ்ட், துணிவு, பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது போல் சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். கடந்த மே மாதம் இவரது வீட்டருகே இவரது நிலத்தில் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

    தனது இடத்தில் கோயில் கட்டுமானம் நடப்பதால் அதை தட்டி கேட்ட ஜிபி முத்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் உடன்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்ற நகைத் தொழிலாளி தனது மகளையும் அண்ணன் மகளையும் டியூசனுக்கு அழைத்துக் கொண்டு பைக்கில் சென்றாராம். அப்போது ஜிபி முத்து வீட்டு முன்பு உள்ள முள்செடி அவரது மகளின் இடது கண் பகுதியில் குத்தியதில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதையடுத்து அந்த நபர் தனது பைக்கை நிறுத்திவிட்டு அங்கிருந்த முற்செடிகளை அகற்றியுள்ளார். அடுத்த நாள் சுடலையாண்டியிடம் முள்செடியை அகற்றியது குறித்து ஜிபி முத்து, மனைவி அஜிதா, சகோதரர் மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

    அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இரு தரப்புக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து ஜி.பி.முத்து உள்பட 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து முத்து வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்ததாவது: எனது இடத்தில் கோயில் பணிகள் செய்ததை தட்டி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளேன். இதனால் என்னை இந்து விரோதி என விமர்சனம் செய்கிறார்கள். என்னை தாக்கியதுடன் எனது 14 வயது மகளை தாக்கி அவரது சட்டையை கிழித்துள்ளார் என ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

    Advertisement

    இந்த பிரச்சினை சற்று ஆறி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஜி.பி. முத்து வீட்டு அருகே கோயில் கட்டுமான தரப்பினர் கடந்த 20 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மாந்திரீக பூஜை நடத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சிசிடிவி காட்சிகளில் பார்த்த ஜிபி முத்து, தந்தை, மனைவி உள்ளிட்டோர் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Youtuber G.P.Muthu family had clash with others for black magic ritual near his house