ஹார்முஸ் ஜலசந்தியில் ரூட் கிளியர்.. கண்ணிவெடிகளை அகற்றிவிட்டோம்! டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

  • வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் ரூட் கிளியர் ஆகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அனைத்து கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்க வைக்கப்பட்டுவிட்டன என்றும், இந்த தகவலை எனக்கு அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

    Advertisement

    ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உண்டானது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தங்கள் அனுமதியின்றி செல்வதை தடுக்கும் விதமாக அப்பகுதியில் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது.

    Advertisement

    கண்ணிவெடிகள் அகற்றுப்பட்டுவிட்டன

    இதனால் அங்கு எண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து அடியோடு முடங்கியது. சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரக்கூடிய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் நாட்டு பிராந்தியமாக அறிவிப்பேன் என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள அனைத்து கண்ணி வெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்க வைக்கப்பட்டுவிட்டன. அமெரிக்க கடற்படை எனக்கு இதை தெரிவித்துள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக தனது ட்ரூத் வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டு இருப்பதாவது:- ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச நீர்ப்பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றுப்பட்டுவிட்டன அல்லது செயல் இழக்க வைக்கப்பட்டன என்று தற்போதுதான் அமெரிக்க கடற்படை என்னிடம் கூறியுள்ளது. ஹார்முஸ் பகுதியில் மீண்டும் கண்ணிவெடிகளை வைத்தால் உடனடியாகக அழிக்கப்படும் என்று ஈரானிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப் மேலும் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தியின் நீர்வழிப்பாதை மற்றும் பிக்காஸ் மலைப்பகுதியை ஒவ்வொரு இஞ்ச் ஆக அமெரிக்கா தனது வான்படைகள் மூலம் கண்காணித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியதாவது:- "ஈரான் மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    அமெரிக்காவுக்கு இன்னொரு தோல்வி உறுதி

    ஈரான் மீது மிகப்பெரிய பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் மிகப்பெரும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார். ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாத தடை பாயும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்கொள்ள தயராக இருப்பபதாக ஈரானும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரான் கூறுகையில், ஈரானின் உறுதியை சோதிக்க அமெரிக்கா தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து தோல்வியையே சந்திக்கிறது.

    அமெரிக்கா மீண்டும் ஒரு தோல்வியையே சந்திக்க இருக்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கையை சமாளிக்க 2 ஆண்டு திட்டத்தை வைத்துள்ளோம். அமெரிக்கர்களின் வீண் தற்பெருமைப் பேச்சை யாரும் நம்புவதில்லை. மற்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் கட்டுப்படுத்தும் பொருளாதார நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    English Summary

    Donald Trump, US President has announced that the route through the Strait of Hormuz is clear. Trump stated that the US Navy informed him that all mines in the Strait of Hormuz have been removed or detonated.