அமெரிக்காவில் திடீரென 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தம்.. பயணிகள் தவிப்பு! என்ன நடந்தது?

  • வாஷிங்டன்: அமெரிக்காவின் மிகவும் பரபரப்பாக இருக்கக் கூடிய கிழக்கு கடலோர பகுதிகளில் உள்ள விமான நிலையங்களின் விமான சேவை முடங்கியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டு உள்ளது. நியூ ஜெர்சி மகாணத்தில் கேபிள் லைன் துண்டிப்பு காரணமாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    Advertisement

    அமெரிக்காவின் வடகிழக்கு பகுதி முழுவதும் திடீரென விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்புடைய முக்கியமான பைஃபர் கேபிள் துண்டிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    15 சதவீத விமானங்கள் தாமதம்

    கட்டுமான பணிகள் நடைபெற்ற போது, கேபிள் இணைப்புகள் தவறுதலாக தொழிலாளர்களால் துண்டிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் முக்கியத் தகவல் தொடர்பு இணைப்பில் கோளாறு ஏற்பட்டதால், நியூவர்க் லிபர்ட்டி, பிலடெல்பியா மற்றும் டெட்டர்போரோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சேவை முடங்கியுள்ளது.

    விமானங்களை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு போடப்பட்டுள்ளது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த வழித்தடங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ஃப்ளைட் அவேர் வெளியிட்ட தகவலின்படி, நியூவர்க் மற்றும் பிலடெல்பியா விமான நிலையங்களில் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள், அதாவது சுமார் 15 சதவீத விமானங்கள் தாமதமாகியுள்ளது
    தெரியவந்துள்ளது.

    Advertisement

    எப்போது தடைகள் நீக்கப்படும்?

    இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:- கேபிள் துண்டிப்பு காரணமாக தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதையடுத்து, விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன. நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற கட்டுமான பணியின் போதுதான் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பழுதுபார்ப்பு பணிகள் 13 மணி நேரம் வரை நீடிக்கும்.

    இதனால், நியூயார்க் பகுதி விமான நிலையங்களில் விதிக்கப்பட்ட விமானத் தடைகள் எப்போது நீக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நியூவர்க் விமான நிலையத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் அல்லது ரத்து ஆகியுள்ளன. அமெரிக்கா முழுவதும் சுமார் 4,000 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. மேலும், 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்றனர். இந்த விமான சேவை பாதிப்பு காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    English Summary

    US Halts: Flight operations at airports along America's busy East Coast have been disrupted. The arrival and departure of over a thousand flights have been affected. The incident occurred due to a disruption in air traffic control communications caused by a severed cable line in New Jersey.