நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. தட்டி தூக்குது தங்கம்! திடீரென எகிறிய விலை! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: கடந்த சில தினங்களாக சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை திடீரென உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காமல் தொடரலாம் அல்லது டிசம்பரில் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாகவே தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து இருப்பதாக சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
வழக்கமாக போர் பதற்றம், பொருளாதார சிக்கல் போன்றவை எழும் போது தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது.

மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும், டாலரின் மதிப்பு நிலையாக இருப்பதும் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு காரணமாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள், வலுவாக இருப்பதும் அந்நாட்டின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்காமல் தொடரலாம் அல்லது டிசம்பரில் உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது.
கடந்த இரண்டாம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 360ம், 3ம் தேதி சவரனுக்கு ரூபாய் 200ம், 4அம் தேதி சவரனுக்கு ரூபாய் 2200, 5ஆம் தேதி சவரனுக்கு 2488 உயர்ந்து இருந்தது.
அதே நேரத்தில் 6-ம் தேதி சவரனுக்கு 1960 ரூபாய் குறைந்தது. 7ஆம் தேதி 160 ரூபாய் சவரனுக்கு அதிகரித்து ஒரு லட்சத்து 5,280 க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 அதிகரித்து ஒரு சவரன் 1 லட்சத்து 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி நேற்று ஒரு கிராம் 205க்கும், 1 கிலோ 2 லட்சத்து 2,05,000 விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications
