கத்தார் பிரதமருடன் டிரம்ப் பேச்சு.. ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா? சாதகமான முன்னேற்றம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: "கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு எதிராக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. அதாவது, வரலாற்றிலேயே ஈரானுக்கு எதிராக மிகப்பெரிய கடற்படை முற்றுகை தொடர வேண்டும் என்றும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'ஆபரேஷன் அயர்ன் கேட்' நடவடிக்கையும் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றன. எனவே, நிலம் மற்றும் கடல் ஆகிய இரு வழிகளிலும் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், " கத்தார் பிரதமரான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானியுடன் நான் மிகச் சிறப்பான உரையாடலை நடத்தினேன். அந்த உரையாடலில் இஸ்லாமியக் குடியரசான ஈரான் தொடர்பாகப் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

iran Trump us Qatar

மிக முக்கியமாக, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகள் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. அதாவது, வரலாற்றிலேயே மிகப்பெரிய கடற்படை முற்றுகை தொடர வேண்டும் என்றும், புதியதான 'ஆபரேஷன் அயர்ன் கேட்' நடவடிக்கையும் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றன. எனவே, நிலம் மற்றும் கடல் ஆகிய இரு முனைகளிலும் நடவடிக்கை தொடர வேண்டும்.

ஈரான் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை!

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அமெரிக்கா முழுமையான ராணுவத் தயார் நிலையில் உள்ளது. நடவடிக்கைக்குத் தயாராகவும், உடனடியாகச் செயல்படவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது. இருப்பினும், தற்போதைய நிலையில் அத்தகைய மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே தெரிகிறது.

இஸ்ரேலும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் ஈரானின் ஆபத்து மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாதகமான முன்னேற்றங்களை நாம் கண்டு வருகிறோம். அமெரிக்காவின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம்.

இந்த ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும்போது, அமெரிக்க மக்களும், உலகமும் முன்பைவிட மிகவும் பாதுகாப்பான சூழலில் இருப்பார்கள்" இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் நிலைப்பாடு என்ன

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வது பற்றி கத்தார் நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் விவாதித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதன்மூலம், கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான 8 பில்லியன் டாலர் சொத்துகள் விடுவிக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக தனது கடல்வழித் தாக்குதல்களை நிறுத்த ஈரான் ஒப்புக்கொள்ளும் என்று சொல்கிறார்கள்.ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடுகளை தன்வசம் வைத்திருக்கும் ஈரான், அவ்வழியே செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை ஈரான் தளர்த்தியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், பிராந்தியத்தில் ஈரானின் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து, அமெரிக்காவும் ஈரானின் துறைமுகம் மீதான ஆக்கிரமிப்பைத் தளர்த்தும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+