Annabhishegam: நாளை ஐப்பசி அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது எப்படி?

  • சென்னை: ஐப்பசி மாத பவர்ணமியில் வரும் அன்னாபிஷேகத்தின் போது எப்படி வழிபாடு நடத்துவது என்பதை பார்க்கலாம். சிவன் கோயில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    Advertisement

    ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேக வழிபாடு மிகவும் சிறந்தது. மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் ஐப்பசியில் வரும் பவுர்ணமியின் போது சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம்!

    Advertisement

    அந்த வகையில் நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: உணவு என்பது வெறும் பசியை போக்குவது மட்டுமில்லாமல் நம்மை இயங்க செய்யும் தெய்வீக சக்தியாகவும் உடலுக்குள் ஆற்றலை உற்பத்தி செய்யும் பொருளாகவும் திகழ்கிறது.

    எனவே உணவை வீணாக்காமல் தெய்வத்திற்குச் சமமாக மதித்து போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு உணவின் மதிப்பை சொல்லித் தருவது அவசியமாகும். சாப்பாட்டைத் தட்டில் பரிமாறியவுடன் கடவுளுக்கு நன்றித் தெரிவித்துவிட்டு உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    Advertisement

    "சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்ற பழமொழிக்கேற்ப அன்னாபிஷேக நாளில் மலை போல் குவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சாத பருக்கையையும் சிவலிங்கமாக தரிசித்து பல கோடி லிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம்.

    நாளை பவுர்மணி தொடங்கும் நேரத்தில் காலை 11.30 மணி முதல் 12 மணிக்குள் அல்லதசு மதியம் 1.35 மணி முதல் 2.30 மணி வரை வழிபாட்டை செய்யலாம். மாலை நேரத்திலும் இதை செய்வது விசேஷம். ஆனால் நேரம் பார்க்க வேண்டியதில்லை.

    வீடுகளில் சிவலிங்கங்களை வைத்திருப்போர் வாழை இலை மீது லிங்கத்தை வைத்து பச்சரிசியால் வடித்த சாதத்தை ஆறவிட்டு அன்னாபிஷேகம் செய்யலாம். லிங்கம் இல்லாதவர்கள் நடராஜர் படத்திற்கோ அல்லது அண்ணாமலையார் படத்திற்கோ சர்க்கரை பொங்கல், புளி சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம். இல்லாவிட்டால் அன்னமாக வைத்து அதன் மேல் பச்சை காய்கறிகள், பழங்களை அலங்காரம் செய்து அழகுப்படுத்தியும் அன்னாபிஷேகம் செய்யலாம்.

    Advertisement

    வீடுகளில் செய்ய இயலாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு பச்சரிசி வாங்கி கொடுக்கலாம். அன்னாபிஷேகம் முடிந்த பிறகு சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற தேவார பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு, அந்த அன்னத்தை வீணாக்காமல் தயிர் கலந்து பிரசாதமா உண்ணலாம். அக்கம்பக்கத்தாருக்கும் கொடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    How to perform pooja for Annabhishegam tomorrow? What is the procedure?