Humming கார்த்திக்.. மீண்டும் சினிமாவுக்கு கம்பேக்! பஞ்ச் வசனம் எல்லாம் பேசுறாரே நவரச நாயகன்.. கவனிச்சீங்களா?

  • சென்னை: தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் கார்த்திக் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. பல வருடங்களாக திரைப்படங்களில் அதிகம் வராமல் இருந்த கார்த்திகை மீண்டும் பார்த்த ரசிகர்கள் இதோ பழைய எனர்ஜியுடன் கார்த்திக் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஒரு உற்சாகமாக கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.

    Advertisement

    வைரலாகும் அந்த வீடியோவில் கார்த்திக் ஒரு பாடலுக்கு மெதுவாக ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறார். பிறகு ரசிகர்களுடன் லைவில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்க, அதற்கு அவரும் சிரித்தபடியே பதில் கொடுத்திருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் சார் தாடி ஏன் வச்சிருக்கீங்க என்று கேட்கிறார்.

    Advertisement

    நடிகர் கார்த்திக் தற்போதைய வீடியோ

    அதற்கு கார்த்திக், தன்னுடைய டிரேட் மார்க் காமெடியுடன், எனக்கு தாடி வளருது அதனால வச்சிருக்கிறேன். இதற்கு முன்பு நான் தாடி வைக்கலையா? என்று சிரித்தபடி கேட்கிறார். இந்த பதில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இவரை சில வருடங்களாக சினிமாவில் பார்க்கவில்லையே என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இவர் கம்பேக் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறதாம்.

    நடிகர் கார்த்திக் காமெடி

    கார்த்திக்கின் அடையாளமே இது போன்ற ஜாலியான பேச்சு தான். அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க வேண்டும், அதுவும் இதே போல பழைய எனர்ஜியுடன் பார்க்க வேண்டும் என்று பலர் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் மருத்துவமனைக்கு செக்அப்புக்கு போன சமயத்தில் வெளியான வீடியோ பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

    Advertisement

    அதை பார்த்த பலரும் இனி கார்த்திக் நிலைமை அவ்வளவுதான், இனி அவரால் பழைய நிலைமைக்கு வர முடியாது... அவருக்கு அந்தப் பழக்கம் இருக்கிறது, இந்த பழக்கம் இருக்கிறது என்று வசைப்பாடி வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி இப்போது அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு கார்த்திக் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    கார்த்திக்கின் ஆரம்ப காலம்

    தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கார்த்திக் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தன்னுடைய அப்பாவின் பெயரை வைத்து சினிமாவில் அறிமுகமாகாமல் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி விட்டார். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக் அதற்குப் பிறகு ஆக்ஷனன் ஹீரோவாகவும், காமெடியான ஹீரோ கேரக்டரிலும் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

    Advertisement

    நடிகர் கார்த்திக்கின் ஹிட் படங்கள்

    40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கார்த்திக் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதிலும் அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், லக்கி மேன் போன்ற படங்கள் எல்லாம் இப்போதும் பலரும் பாராட்டப்படும் படங்கள்.

    டெல்லி தடியடி சம்பவத்துக்கு கொதித்த நடிகர் டொவினோ தாமஸ்.. வெளியிட்ட பதிவு! பாராட்டும் ரசிகர்கள்
    இந்த படங்கள் தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பானாலும் எதோ முதல் முறை பார்ப்பது போல பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். கார்த்திக்கின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கார்த்திக் சினிமாவிற்கு வருகிறாரா? அதுவுன் ஹீரோவாக நடிக்கிறாரா? வில்லனாக நடிக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்புடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை கார்த்திக் தரப்பினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Karthik: A recent video released by actor Karthik, who was one of the leading heroes in Tamil in the 80s and 90s in Tamil cinema, is going viral on social media. Fans who have seen Karthik again who has not appeared in films for many years are giving enthusiastic comments that Karthik should act again with the old energy.