விஜயகாந்த் அப்பவே சொன்னாரு! அவர் இருந்திருந்தால்! ராதா விஷயத்தில் நடிகை அம்பிகா உருக்கம்

  • சென்னை: நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரி செக் மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகார் பெரிதாக பேசப்பட்டதை தொடர்ந்து நேற்று அம்பிகாவும் ராதா கொடுத்த புகார்களுக்கு எல்லாம் மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அதை தொடர்ந்து அவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜயகாந்த் அப்பாவே சொன்னாரு, அவர் சொன்னது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

    Advertisement

    ராதா கொடுத்த புகார்

    பணம், காசு, சொத்து என்று வரும்போது கூட பிறந்தவர்களும் எதிரிகளாக மாறிவிடுவார்கள். அது சாதாரண குடும்பத்தில் மட்டுமல்ல எவ்வளவு வசதி வாய்ப்புகள், கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும்... பிரபலங்களாக இருந்தாலும், அவர்களும் சாதாரண மனிதர்கள் போல தான் இது போன்ற பிரச்சனைகளில் சிக்கி விடுகிறார்கள். நடிகை ராதா தன்னுடைய சகோதரி 46 கோடி செக் மோசடி செய்து விட்டார் என்று சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    அம்பிகா கொடுத்த விளக்கம்

    ஆனால் அதைத் தொடர்ந்து பேசிய அம்பிகா, ராதா எனக்கு 95 கோடி தர வேண்டும் அதற்காக கொடுத்த செக்கை அவரே இப்போ நிறுத்தி வைத்து போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சொத்து பிரச்சனை கொஞ்ச நாட்களாகவே போய்க்கொண்டு இருக்கிறது. அதற்காக நான் 2 மாசத்துக்கு முன்னாடியே கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்து இருக்கிறேன். அதற்கான விசாரணைக்கு கூட ராதா வரவே இல்லை.

    சொத்து பிரச்சனை

    ஏஆர்எஸ் கார்டன் பற்றிய பிரச்சனை இருக்கிறது. அதுபோல என்னுடைய நகைகளும் ராதா வசம் இருக்கிறது. அதைக் கேட்டாலும் தரவில்லை. அதற்கெல்லாம் சேர்த்துதான் அவர் செக் தந்தார். கடைசியில் என்னை திருடி என்று அவரே போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார் என்று கண்ணீருடன் பேசி இருந்தார். இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும் போது இன்னொரு பேட்டியில் விஜயகாந்த் பற்றியும் அம்பிகா உருக்கமாக பேசி இருக்கிறார்.

    Advertisement
    ராதாவுக்கு ஒரு பிரச்சனை இருக்கு! என் தங்கைக்காக யோசித்தேன்! அசிங்கப்படுத்திட்டாங்க! அம்பிகா உருக்கம்

    விஜயகாந்த் சொன்ன வார்த்தை

    அதில், நான் ஏஆர்எஸ் கார்டன் வாங்கிய சமயத்திலேயே விஜயகாந்துக்கு தெரியும். அப்போது அவர் என்கிட்ட நீ இப்படியே இருந்தால் நாளைக்கு பிரச்சனை வரும்... கண்டிப்பாக இந்த சொத்தை வச்சு உங்களுக்குள் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னாரு. அது இன்னைக்கு நடந்துடுச்சு. ஆனால் அவர் மட்டும் இருந்திருந்தால் இப்போது நியாயமா நடந்திருப்பாரு. சரியாக பேச்சு வார்த்தை செஞ்சு இந்த பிரச்சனையை முடித்து வைத்திருப்பார். ஆரம்பத்தில் இது பற்றி பேசும்போதே நான் இருக்கிறேன் பார்த்துக்கலாம் என்று அவர் சொன்னாரு.

    Advertisement
    ராதா குற்றச்சாட்டுக்கு அம்பிகா விளக்கம்.. 2 மாதத்திற்கு முன்பே நான் புகார் கொடுத்து இருக்கிறேன்! 97 கோடி தரனும்!

    இன்னைக்கு கோர்ட் வரைக்கும் பிரச்சனை போயிடுச்சு. இனி யாரு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதில் தீர்வு வராது. நான் ராதாவுடன் பக்கத்தில் உட்கார்ந்து இனி பேசவே மாட்டேன். எதுவாக இருந்தாலும் லீகலாக தான் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று அம்பிகா பேசியிருக்கிறார்.

    English Summary

    Actress Ambika : Following the widespread discussion surrounding the complaint filed by actress Radha a few days ago—alleging that her sister had committed cheque fraud—Ambika met the press yesterday to refute all the allegations. Subsequently, in an interview, she spoke emotionally, recalling that actor Vijayakanth had predicted this situation, and noting that events have unfolded exactly as he had foreseen.