கொளத்தூர் மக்களுக்காக ஸ்டாலின் அவ்வளவு செய்தாரு! ஆனால் அதிசயமாக இருந்தது! நடிகை ரோஜா கேள்வி

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரு விஷயம் மட்டும் அடிக்கடி பேசப்படுகிறது. அது மு.க ஸ்டாலின் தனது நீண்ட நாள் அரசியல் கோட்டையாக வைத்திருந்த கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது தான். அதுவும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம். இந்த வெற்றியை பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கிறது என்று நடிகை ரோஜாவை ஓபன் ஆக பேசி இருக்கிறார்.

    Advertisement

    ஸ்டாலின் தோல்வி

    2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் விஎஸ் பாபு 82,297 வாக்குகள் பெற்ற நிலையில் ஸ்டாலினுக்கு 74, 222 வாக்குகள் கிடைத்தன. 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இப்படி ஒரு முடிவு வந்ததே பலருக்கும் ஆச்சரியமாக இருந்த நிலையில் நடிகை ரோஜா பேசியிருக்கும் விஷயம் இப்போ கவனம் பெற்று இருக்கிறது. அதாவது ரோஜா பேசுகையில், ஒரு தேர்தலில் ஆட்சி மாற்றம் வருவது என்பது புதிதல்ல. ஒரு முறை ஒருவர் வெற்றி பெறுவார். அடுத்த முறை இன்னொருவர் வெற்றி பெறுவார். இதெல்லாம் அரசியலில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் தான்.

    Advertisement

    ரோஜாவின் கேள்வி

    ஆனால் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர் செய்த விஷயங்களை மக்கள் முற்றிலுமாக மறந்துவிட்டார்களா? என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று ரோஜா கூறியிருக்கிறார். அதிலும் ஸ்டாலின் போன்ற ஒரு முக்கியமான அரசியல் தலைவர் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது, அந்த தொகுதிக்காக ஸ்டாலின் அவ்வளவு பார்த்து பார்த்து செய்திருந்தார். ஆனால் புதிதாக வந்த ஒரு நபரையை பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது ஆனால் அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜய் தான்.

    மக்களின் மாற்றம்

    விஜய் மீது மக்களுக்கு இருக்கும் அன்பு தான். சினிமாவை நம்பி அவருக்கு மக்கள் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். சினிமாவில் ஹீரோ வில்லனுடன் சண்டை போடுவதை நிஜத்தில் நம்பி நமக்காக இப்படித்தான் ஃபைட் பண்ணுவாரு என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதிநிதிப்படுத்தி வந்தார். 2021 தேர்தலில் கூட அவர் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

    Advertisement


    விஜய்க்கு லக்

    அப்படிப்பட்ட தொகுதியில் இந்த முறை ஏற்பட்ட மாற்றத்தை பார்த்துதான் மக்கள் மனநிலை எப்படி மாறியது என்று ரோஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு அவர் நிற்கவில்லை விஜய் முதல்வராக வெற்றி பெற்ற விதத்தையும் பற்றியும் பேசி இருக்கிறார். விஜய் கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலே ஆட்சியைப் பிடித்து விட்டதால் அவருக்கு கட்சி நடத்துவதில் இருக்கும் கஷ்டங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவர் இந்த முறை தோற்றுப் போயிருந்தால் 5 வருடம் அந்த கட்சியையும், அதில் இருக்கும் உறுப்பினர்கள், தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பார் என்றும் ரோஜா பேசியிருக்கிறார்.

    English Summary

    Roja: Currently, one topic is being widely discussed in the Tamil Nadu political arena: M.K. Stalin's defeat in the Kolathur constituency—a seat he had long held as his political stronghold—at the hands of V.S. Babu, a candidate from Vijay's *Tamizhaga Vettri Kazhagam*. Actress Roja has openly remarked that this victory appears rather unusual.