சென்னை: காமெடி நடிகராக பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்த சூரி விடுதலை படத்திற்கு பிறகு ஹீரோவாக எடுத்த ஒவ்வொரு அடியும் வித்தியாசமாக இருக்கிறது. கருடன், கொட்டுக்காளி, மாமன் என தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்தவர் இப்போது மண்டாடி மூலம் இன்னொரு புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், சத்யராஜ், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ள மண்டாடி இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை, பாரம்பரியம், படகு போட்டி அதற்குள் இருக்கும் உறவுகள், கோபம், சண்டை என ஒரு புதிய உலகத்துக்குள் படம் நம்மை அழைத்துச் செல்கிறது.
படம் வெளியானதும் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கின்றனர். அதில் பெரும்பாலானூறின் கவனம் சூரியின் நடிப்பிலும் கடல் மற்றும் படகு போட்டி காட்சிகளில் தான் நிற்கிறது. படம் பார்த்த ஒரு ரசிகர் படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை திரையை விட்டு கண்களை நகர்த்தவே முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஒரு காட்சி கூட லேக் ஆகவில்லை. வசனங்கள், ஆக்சன் காட்சிகள் என எல்லாமே சூப்பர் என்று அவர் கருத்து கூறியிருக்கிறார். இன்னொரு ரசிகரோ ஒரு படி மேலே போய்விட்டார். சூரி இப்போது டைர் 1 ஹீரோ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனுஷன் பின்னி இருக்கிறார். இந்த மாதிரி ஒரு பர்பாமன்ஸை சூரியிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை என்று பாராட்டி இருக்கிறார். அதிலும் படத்தின் ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு சீக்குவென்ஸும் நன்றாக இருப்பதாகவும், படகு போட்டி, சண்டை காட்சிகள், தியேட்டரில் வேற லெவல் அனுபவத்தை கொடுக்கிறது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மண்டாடியின் மிகப்பெரிய ஸ்பெஷல் இந்த கடல் காட்சிகள் தான் போலிருக்கிறது. தமிழ் சினிமாவில் பல படங்கள் கடல் பின்னணியில் வந்திருக்கிறது. ஆனால் இங்கே கடல் ஒரு பின்னணி மட்டும் இல்லை, அந்த மக்களின் வாழ்க்கையும் அவர்களுடைய பாரம்பரியத்தையும் சுற்றி கதை நகர்கிறது. விடுதலை சூரியை வேறு கோணத்தில் காட்டியது என்றால் மண்டாடி இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் சில ரசிகர்கள் சூரியின் கேரியரில் சிறந்த பெர்பார்மன்ஸ் களில் மண்டாடி இருக்கும் என்று பாராட்டுகிறார்கள். மொத்தத்தில் முதல் நாள் ரசிகர்களின் ரியாக்ஷனை பார்த்தால் மண்டாடி சூரிக்கு இன்னொரு வெற்றி படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.மண்டாடி பட விமர்சனம்
கடலுக்குள் ஆக்சன்
அடுத்த வெற்றி