சென்னை: திருமணத்திற்கு முன்பான உறவு பற்றி குஷ்பு மீண்டும் பேசியது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 20 வருஷத்துக்கு முன்பு இதே விஷயத்தை பற்றி அவர் பேசிய போது தமிழகமே பரபரப்பானது. இப்போதும் அதே கருத்தை வேறு ஒரு கோணத்தில் குஷ்பு மீண்டும் பேசி இருக்கிறார். உடனே சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பழைய பேட்டி சர்ச்சையையும் தூசி தட்டி எடுத்து இருக்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வது குறித்து குஷ்பு பேசும்போது, கல்யாணத்திற்கு முன்பு உறவு நடக்குதுன்னு அப்பவே நான் சொன்னேன். இன்னைக்கு குப்பை தொட்டியில குழந்தை இருக்கிறதை நாம பார்க்கிறோம். பெங்களூரில் 7000 மாணவர்களுக்கு பால்வினை நோய் இருக்குதுன்னு சொன்னாங்க. திருமணத்திற்கு முன் உறவு வைத்து கொள்ளும் நிலையில் எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்லித் தர வேண்டும். அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருக்கிறோம் என்று குஷ்பு பேசி இருக்கிறார்.
அவர் சொல்ல வந்த விஷயம் உறவு இருக்கிறதா? இல்லையா? என்பதை மட்டும் பேசுவதால் பிரச்சனை தீராது. இளைஞர்களுக்கு பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சரியான விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் குஷ்பு இப்போது இதை பேசும்போது 2005ல் அவர் சொன்ன அதே கருத்து மீண்டும் நினைவுக்கு வந்து விடுகிறது. 2005ல் இந்தியா டுடே தமிழுக்கு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. மனைவியாக வருபவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று பேசி இருந்தார். அவ்வளவுதான் அப்போது அந்த பேட்டி மிகப்பெரிய புயலை கிளப்பியது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன, போராட்டங்கள் நடந்தன. குஷ்பூவுக்கு எதிராக பல வழக்குகளும் தொடரப்பட்டன. ஒரு கட்டத்தில் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு நிலைமை சென்றது. குஷ்பூ பின்னர் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமும் அளித்தார். அந்த விவகாரம் பல ஆண்டுகள் சட்ட போராட்டமாக நடித்தது. இறுதியில் 2010ல் உச்சநீதிமன்றம் அவருக்கு எதிராக தொடங்கப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. அந்த நேரத்தில் குஷ்பூ சொன்ன இன்னொரு விஷயம் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முன்பான பாலியல் வாழ்க்கையை மட்டும் வைத்து அவருடைய குணத்தை மதிப்பிடக்கூடாது என்பதுதான். அதனால் தான் இப்போது அவர் மீண்டும் இதே விஷயத்தை பேசியதும் 20 வருஷங்களுக்கு முன்பு சொன்ன அதே கருத்தை தான் இப்போதும் குஷ்பு சொல்கிறார் என்று ஒரு தரப்பினர் ஆதரிக்க, இன்னொரு தரப்பினர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.நடிகை குஷ்பு பேட்டி
பழைய சர்ச்சை பேச்சு
குஷ்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு