சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி விமர்சிப்பவர்களுக்கும், தனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கும் நீண்ட பதிவின் மூலம் தனது கோபத்தை காட்டி இருக்கிறார்.
ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். நீண்ட நாட்களாக தங்களுடைய காதலை வெளியில் சொல்லாமல் வைத்திருந்த இந்த ஜோடி, திருமணத்துக்கு பிறகு தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டுசென்று வருகின்றனர். ஆனால் சமீபத்தில் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்ப, இப்போது அது விவாகரத்து வதந்தி வரை சென்றிருக்கிறது.
கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண் 9' நிகழ்ச்சியில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து பேசியிருந்தனர். அப்போது, விஜய்யிடம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தான் பலமுறை கேட்டதாக ராஷ்மிகா கூறியிருந்தார். ஒரு கட்டத்தில், 100 முறை கேட்ட பிறகுதான் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வேன் என்று விஜய் கூறியதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். இந்த பேச்சுதான் இணையத்தில் சர்ச்சையானது. ராஷ்மிகா இவ்வளவு முறை கேட்ட பிறகுதான் விஜய் திருமணத்துக்கு சம்மதித்தாரா என்று சிலர் கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர் விஜய்யின் கேரக்டரை விமர்சித்து, அவரை 'ரெட் ஃபிளாக்' என்று கலாய்க்க தொடங்கி விட்டனர். அதாவது, காதல் உறவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நபர் என்ற பொருளில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில், ராஷ்மிகா தனது கணவரை பின்தொடர்ந்து வருகிறார். ஆனால் விஜய் இன்ஸ்டாகிராமில் யாரையும் பாலோ பண்ணவில்லை என்பதையும் சிலர் கவனித்து, அவர் ராஷ்மிகாவை கூட ஃபாலோ பண்ணல, இருவருக்கும் இடையில் பிரச்சனை இருக்கலாம் என்று பேச தொடங்கினர். இதிலிருந்து விவாகரத்து பற்றிய வதந்திகளும் பரவின. தொடர்ந்து தங்களுடைய உறவை பற்றிய விமர்சனங்களும், தேவையில்லாத அறிவுரைகளும் வந்துகொண்டிருந்த நிலையில், ராஷ்மிகா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். பொதுவாக மற்றவர்களின் கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பாத தான், இந்த முறை ஏன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார். இந்த பதிவில், எங்களுடைய பேட்டி குறித்த விவாதம், ஒரு கருத்தை பகிர்ந்துகொள்வதைத் தாண்டி, யாரையாவது குறிவைத்து கோபத்தை வெளிப்படுத்தும் கூட்டமாக மாறிவிட்டது. எங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கருத்துகள், விமர்சனங்கள் மட்டுமல்லாமல், கேட்காமலேயே அறிவுரைகளும் குவிந்துவருகிறது. எங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியாதவர்கள், இணையத்தில் பார்த்த சில விஷயங்களை வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். குறிப்பாக, என்னை பற்றியும் விஜய்யை பற்றியும் தவறான தகவல்களையும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களையும் நம்புவதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்று தெரிவித்துள்ளார். 1000 முறை திருமணம் திருமணத்தை பற்றி 100 முறை கேட்டது, விஜய் சம்மதிக்க எடுத்துக்கொண்ட காலம் ஆகியவற்றை மட்டும் வைத்து எங்களுடைய காதலை மதிப்பிட முடியாது. வாழ்க்கையின் சந்தோஷமான நேரத்திலும், கஷ்டமான சூழ்நிலைகளிலும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, திருமணம் செய்துகொள்வது சரியான முடிவா என்று யோசிக்க இருவருக்கும் நேரம் தேவைப்பட்டது. என் மனதின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய், நடைமுறை விஷயங்களை யோசித்து பார்த்து முடிவெடுப்பவர். அதனால்தான் எங்களுக்கு திருமணம் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். கஷ்டமான நேரத்தில் தங்களுடைய உறவை பற்றி அறிவுரை சொல்பவர்களுக்கும் ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார். தன்னை பற்றிக் கவலைப்படுவதாக கூறி, உறவை விட்டுவிடுமாறு அறிவுரை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவித்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கஷ்டப்பட்ட காலத்தில் அவர்கள் யாரும் இல்லை, அந்த நேரத்தில் விஜய் தான என்னுடன் இருந்தார் இப்போதும் தனக்கு துணையாக இருப்பது அவர்தான். உடல்நல பிரச்சனை ஏற்பட்டாலும், மனம் உடைந்தாலும், பதற்றம் ஏற்பட்டாலும் எனக்கு தேவையான ஆறுதலையும் ஆதரவையும் விஜய் கொடுப்பதாக அவர் விவரித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு தான் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அந்த மகிழ்ச்சி தனது முகத்திலும் நடிப்பிலும் அன்றாட வாழ்க்கையிலும் தெரியும் என்று நம்புவதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். அதனால், தன்னை பற்றியோ விஜய்யை பற்றியோ மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பொறுத்துக்கொள்ள முடியாது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஒருபுறம் இருந்தாலும், தன்னை பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள் தனது குடும்பத்தை பற்றியும் கருத்து சொல்வதை ராஷ்மிகா கடுமையாகக் கண்டித்திருக்கிறார். பெண்ணியம் என்ற பெயரில் இன்னொருவரின் வாழ்க்கையை தீர்மானிக்க முயல்வது சரியல்ல, ஒரு பெண் தனது வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்து வாழ்வதற்கான உரிமைதான் முக்கியம். மற்றவர்களின் முடிவுகளைத் தவறு என்று சொல்லி அவர்களைத் தாழ்த்துவது பெண்ணியம் கிடையாது என்றும் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இந்த பதிவால் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடனான விமர்சனங்களுக்கு நேரடியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.என்னதான் பிரச்சனை
கடுப்பான ராஷ்மிகா பதிவு