Viswanath & Sons: விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு? சூர்யாக்கு கம்பேக்? ரசிகர்கள் சொல்வது இதுதான்

  • சென்னை: சூர்யா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வழக்கமான ஆக்சன் கதைகளில் இருந்து கொஞ்சம் விலகி சூர்யாவின் இன்னொரு பக்கத்தை காட்டும் படமாக வந்திருக்கிறது. வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோயினியாக மமிதா பைஜு நடித்து இருக்கிறார். ராதிகா சரத்குமார், ரவீனா, பவானி ஸ்ரீ, காளி வெங்கட் போன்ற பலர் முக்கிய கேரக்டரில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் எப்படி இருக்கு என்ற ரிவ்யூ பார்க்கலாம்.

    Advertisement

    விஸ்வநாத் & சன்ஸ் ரிவ்யூ

    40 வயது கடந்த சஞ்சய் விஸ்வநாத் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருக்கிறார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் சஞ்சயின் வாழ்க்கையில் மமீதா பைஜூ எதிர்பாராத விதமாக வருகிறார். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் ஆரம்பத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் அந்த வயது வித்தியாசத்தை மட்டும் குறித்து காதலை சொல்லாமல் குடும்பம், உறவுகள், உணர்வுகள் என கதை கொஞ்சம் கொஞ்சமாக வேறு பாதைக்கு செல்கிறது.

    Advertisement


    சூர்யா மமீதா நடிப்பு

    டீசர் வெளியான போதே சூர்யா மமீதா ஜோடியை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இருந்தார்கள். இந்த படத்தில் சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக மட்டும் பார்க்க முடியாது. ஜாலியான மென்மையான குடும்பத்தோடு பழகக்கூடிய ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்களில் பலர் சூர்யாவின் பழைய ரொமான்டிக் ஹீரோவை மீண்டும் பார்க்க முடிகிறது என்று கூறி வருகின்றனர். சிலர் கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி நினைவுபடுத்துவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக முதல் பாதையில் சூர்யாவின் நடிப்பும் அவருடைய காமெடி டைமிங் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். மமீதாவிற்கு விஜய் நடித்த ஜனநாயகன் ஒரு புதிய அடையாளத்தை கொடுத்திருந்த நிலையில் இந்த படமும் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. மமிதா பைஜூ இந்த படத்தில் வெறும் ஹீரோயினியாக மட்டும் வந்து போகாமல் சூர்யாவுடன் அவருக்கு கெமிஸ்ட்ரியும் படத்தில் பிளஸ்ஸாக இருக்கிறது.

    Advertisement

    படத்தின் குறை

    சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சூர்யாவை பல வருடங்களுக்கு முன்பே நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகைக்காக இருந்த மமீதா இப்போது அவருடனே கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமாருக்கும் படத்தில் நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சூர்யா மமீதா, ராதிகா ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

    படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னனி இசையும் ரசிகர்களின் கவனம் பெற்று இருக்கிறது. குறிப்பாக படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு ஜிவி பிரகாஷின் பின்னணி இசை நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இந்த படத்தில் குறைகள் இல்லையா? என்றால் அதுவும் இருக்கிறது முதல் பாதி மிகவும் ஜாலியாக வேகமாக செல்கிறது என்று ரசிகர்கள் கூறும் நிலையில், இரண்டாம் பாதியில் முதல் பாதி அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்பதுதான் அதிகமாக சொல்லப்படும் குறை.

    Advertisement

    சில இடங்களில் அதை கொஞ்சம் நீளமாகவும், வழக்கமான கமர்சியல் சினிமா பாதைக்கு செல்வதாகவும் கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால் படம் முழுவதும் சளிப்படைகிற அளவுக்கு இல்லை என்றும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய ஃபீல் கூட் படம் என்றும் பலர் கூறுகின்றனர்.

    English Summary

    Viswanath and Sons: Vishwanath and Sons released today starring Suriya is a film that deviates from the usual action stories and shows another side of Suriya. Venky Atluri, who directed Vaathi and Lucky Bhaskar, has directed this film. Mamita Baiju is playing the heroine. Radhika Sarathkumar, Raveena, Bhavani Sri, Kali Venkat etc. are playing the main characters. Let's see the review of this movie.