சென்னை: "பொல்லாதவன்" கதையை வெற்றிமாறன் முதலில் பசுபதியிடம்தான் சொன்னாராம். புதிய டைரக்டர் என்பதால் பசுபதி அதை தவிர்க்க, பிறகு படம் வெளியாகி ஹிட் அடித்ததும் வெற்றிமாறனை அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார் பசுபதி.. அதன் விளைவாகவே அசுரன் பட சான்ஸ் பசுபதிக்கு கிடைத்துள்ளது. "நடிகன் திரையில் தெரியக்கூடாது, கேரக்டர் மட்டுமே தெரிய வேண்டும்" என்பது பசுபதியின் தத்துவமாகும்" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு
Media Circle சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பசுபதி வடசென்னையில் வளர்ந்தவர். 16 முதல் 18 வயதில் அவருக்கு பிரேக் டான்ஸ் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருவில் நடனமாடிய பசுபதியை ஒருவர் கூத்துப்பட்டறையில் சேர்க்க, அங்கு நாசரின் வழிகாட்டுதலால் கமல்ஹாசனை சந்தித்து "மருதநாயகம்" வாய்ப்பைப் பெற்றார்.
அந்த படம் கைவிடப்பட்ட பிறகு, பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவருக்கு, இயற்கை படத்தின் சர்ச் ஃபாதர் கேரக்டர் நல்ல அடையாளத்தை தந்தது. வெயில் படத்தில் எமோஷனல் நடிப்பையும், மஜா படத்தில் காமெடியையும் , ஈ' படத்தில் கம்யூனிஸ்ட் போராளி கேரக்டரையும் சிறப்பாக செய்தார்.. அதற்கு பிறகு, கமல்ஹாசனின் "விருமாண்டி" படத்தின் கொத்தாளத்தேவன் கேரக்டர், பசுபதியின் கலைவாழ்க்கையில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது. "இவ்வளவு பெரிய ரோலை என்னால் சுமக்க முடியுமா?" என பசுபதி தயங்கியபோது, கமல் நம்பிக்கை அளித்து, அந்த கொத்தாளத்தேவன் வேடத்தை தந்தாராம். ஆனால், தொடர்ச்சியாக கமர்சியல் வில்லன் மாதிரியான வேடங்களால் சோர்வடைந்த பசுபதி, "சினிமாவை விட்டே விலகப்போகிறேன்" என கமலிடம் சொல்லியிருக்கிறார்.. உடனே இதைக்கேட்ட கமல், பசுபதியை பொறுமையாக இருக்கச் சொல்லி, "மும்பை எக்ஸ்பிரஸ்" படத்தில் ஒரு பிளாக் காமெடி வேடத்தையும் தந்துள்ளார். "சார்பட்டா பரம்பரை" படத்தில் ரங்கன் வாத்தியாராக வாழ்ந்து காட்டினார் பசுபதி.. வடசென்னையில் வளர்ந்ததால் பாக்ஸிங் சூழலை நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு நிறையவே அந்த படத்தில் கை கொடுத்தது. "பொல்லாதவன்" கதையை வெற்றிமாறன் முதலில் பசுபதியிடம்தான் சொன்னாராம். புதிய டைரக்டர் என்பதால் பசுபதி அதை தவிர்க்க, பிறகு படம் வெளியாகி ஹிட் அடித்ததும் வெற்றிமாறனை அழைத்து வருத்தம் தெரிவித்தார் பசுபதி.. அதன் விளைவாகவே அசுரன் பட சான்ஸ் கிடைத்துள்ளது. "நடிகன் திரையில் தெரியக்கூடாது, கேரக்டர் மட்டுமே தெரிய வேண்டும்" என்பது பசுபதியின் தத்துவமாகும்.. இவ்வளவு பெரிய நடிகரான பிறகும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பாமல், சென்னை நகர இரைச்சலைத் தவிர்த்து பெரியபாளையத்தில் ஃபார்ம்ஹவுஸ் அமைத்து வாழ்கிறார். பெரியபாளையம் ஒரு அமைதியான கிராமிய சூழலைக் கொண்ட பகுதியாகும். இங்குதான் ஒரு பண்ணை நிலத்தை வாங்கி, அங்கு அமைதியான சூழலில் அவர் செட்டில் ஆகியுள்ளார்.. அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து வேப்பங்குச்சியால் பல் துலக்கி, பறவைகளின் சத்தத்தைக் கேட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நகரத்தில் காலையில் கேட்கும் வாகன ஹாரன் சத்தங்களுக்குப் பதிலாக, அதிகாலையில் கூவும் சேவலின் சத்தம், காக்கை மற்றும் குருவிகள் என இயற்கையான சத்தங்களை கேட்டு மகிழ்வதையே பசுபதி உண்மையான வாழ்க்கை என்று நம்புகிறார். பண்ணை வீட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, காய்கறிகளை விளைவித்து, ரசாயனமற்ற ஆரோக்கியமான உணவையே சாப்பிடுகிறார். ஷூட்டிங், விருது வழங்கும் விழாக்கள் அல்லது முக்கியமான நிகழவு இருந்தால் மட்டுமே அவர் சென்னை நகரத்திற்கு வருகிறார். ஷூட்டிங் முடிந்த கையோடு, பெரியபாளையத்தில் உள்ள தனது இயற்கை கூண்டிற்குத் திரும்பி விடுகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.வெயில் பட எமோஷனல்
மிஸ்ஸான பொல்லாதவன்
பெரியபாளையம் பண்ணை வீடு
ஃபார்ம்ஹவுஸில் நடிகர் பசுபதி