பஸ் ஸ்டாண்ட் கடைத்திண்ணையில் மஞ்சு.. 3 வருட மர்மம்.. கள்ளக்காதலர்கள் சண்டையில் கிடைத்த துப்பு

  • திருவனந்தபுரம்: கேரளாவில் 3 வருடங்களுக்கு முன்பு சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 8 மாத பெண் குழந்தையின் மரணம் இப்போது கொலை வழக்காக மாறியுள்ளது. குழந்தைக்கு என்ன நடந்தது? யார் செய்த காரியம் இது? என்றே தெரியாமல் இருந்த நிலையில், இப்போது இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரளாவில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

    Advertisement

    கடந்த 2023-ல் நடந்த சம்பவம் இது... கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே புளிக்கீழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் அருகே சதுப்பு நிலம் உள்ளது.

    Advertisement

    கடந்த 2023-ம் வருடம் ஆகஸ்ட் 12-ம் தேதி அந்த பகுதியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்... அது யார் குழந்தை என்றும் தெரியவில்லை..

    8 மாத குழந்தை

    இதனால் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். குழந்தையை காணவில்லை என்று யாராவது புகார் தந்திருப்பார்கள் என்று நினைத்தனர்.. அப்படி யாருமே புகார் கொடுக்கவில்லை. இதனால் அந்த குழந்தை யார், அதன் பெற்றோர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சின்ன க்ளு கூட கிடைக்காமல் இந்த வழக்கில் உடனடியாக முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியே 3 வருடங்கள் ஓடிவிட்டன..

    Advertisement

    இந்நிலையில், சமீபத்தில் பாலக்காடு பகுதியில் மஞ்சுவுக்கும் அவரது முன்னாள் கள்ளக்காதலன் சிவாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் குழந்தையின் மரணம் தொடர்பாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி திட்டி கொண்டார்களாம்..

    மாறி மாறி குற்றச்சாட்டு

    இவர்களது வாக்குவாதத்தைக் கேட்டு அந்த பகுதிகள் அதிர்ச்சியடைந்தனர்.. 3 வருடங்களாக குழந்தையின் மரணத்தில் விடை கிடைக்காமல் தவித்து வந்தே நிலையில், இப்போது இந்த தகவலை உடனடியாக அங்குள்ள சமூக நல ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவித்தனர். அவர் உடனே போலீசாரிடம் விவரங்களை சொன்னார்.. இதையடுத்து மஞ்சுவை சுற்றி வளைத்தனர் போலீசார்.. விசாரிக்கவும் துவங்கினார்கள்.. இதை மஞ்சு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. போலீசாரிடம் மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.

    Advertisement

    அதாவது, 2023-ம் வருடம் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு சங்கனாச்சேரி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள கடைத்திண்ணையில் மஞ்சுவும் சிவாவும் தனிமையில் நெருக்கமாக இருந்தார்களாம்.. அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, குழந்தையின் வாய், மூக்கை அழுத்தியிருக்கிறார். இதில் குழந்தை, மூச்சுத் திணறி இறந்துள்ளது.

    கள்ள உறவு காரணமில்லை.. சிங்கப்பூரில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்! வினோதமான டேட்டா

    மஞ்சு தந்த வாக்குமூலம்

    பிறகு சிவா, தனது சகோதரர் சக்தி என்பவருக்கு போன் போட்டு வரவழைத்துள்ளார்.. 2 பேரும் சேர்ந்து குழந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்று சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புளிக்கீழ் சதுப்பு நிலத்தில் புதைத்து விட்டார்களாம். இதையெல்லாம் வாக்குமூலமாக மஞ்சு போலீசில் தெரிவித்தார்.

    Advertisement

    இதையடுத்து, இந்த வழக்கில் மஞ்சுவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு ஜெயிலில் அடைத்தனர். குழந்தையை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் சிவாவும், உடலை மறைக்க உதவியதாக கூறப்படும் அவரது சகோதரர் சக்தியும் இதுவரை சிக்கவில்லை. 2 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது குற்றவாளிகள் யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், 3 வருடங்களுக்குப் பிறகு, கள்ளக்காதலர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம், இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சு அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்ட தகவல்களை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்...!!

    English Summary

    Bus Stand Platform, Manju and 3 Years of Mystery.. Lovers’ Fight Reveals a Clue in Kerala