கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சிக்கிய அண்ணாமலை கார்.. தடாலடி முடிவால் ஆரவாரம்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள காரில் வந்த அண்ணாமலை, கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நிலவிய போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இதனால் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தும், இருசக்கர வாகனத்தின் மூலமாகவும் சென்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக அரசை கண்டித்து அதிமுக பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேஜகூ ஆர்ப்பாட்டம்
இதேபோல தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகியவற்றை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலை வகித்தார்.

களத்தில் அண்ணாமலை
மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என கூறியிருந்தனர். அதிமுக, பாஜக, பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, தமமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேலுமணி, அண்ணாமலைக்காக ஆனால் அண்ணாமலை சுமார் 6 மணியளவில் தான் அண்ணாமலை ஆர்ப்பாட்ட களத்திற்கு வந்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டத்திற்கு மக்கள் வந்திருந்தது மற்றும் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் இருந்து ஜி.டி நாயுடு மேம்பாலம் மூலம் காரில் வந்தார். மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாமலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். கார் மிகவும் மெதுவாக நகர்ந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் அண்ணாமலை காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் மேம்பாலத்தில் நடந்தார்.
ஆரவாரம்
அண்ணாமலை நடந்து சென்றதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஆரவாரம் செய்தனர். சிலர் அண்ணாமலைக்கு ஹாய் சொல்லி கைக்குலுக்கி சென்றனர். பிறகு அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை சென்றார். சிறிது தூரத்திற்கு பிறகு கட்சி நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்துக்கு சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications