பீஸ்ட்: “அரசு பதவிகளில் உள்ளோரை விமர்சிக்க வேண்டாம்” - விஜய் சார்பில் அறிக்கை
அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை
"அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது."
என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனாந்த் நடிகர் விஜய்யின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாஜக எதிர்ப்பு நிலையா?
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.
அதில் நடிகர் விஜய் காவிக் கலரில் ஒரு ஸ்கீரினை கிழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது பாஜகவை எதிர்க்கும் விதமாக வைக்கப்பட்ட காட்சி என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்தன.
- விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்திற்கு ட்ரைலரை வைத்து தடை கோருவது ஏன்?
- கேஜிஎஃப் 2: 121 ஆண்டுகளில் 900 டன் தங்கம் - கோலார் தங்க வயலின் வரலாறு என்ன?
பாஜக தரப்பில் இதற்கு எதிர்ப்புகளும் எழுந்தன.
இதுகுறித்து புகார் அளிக்கப்போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய்யின் சார்பாக இப்படி ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு
இதற்கிடையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
இந்த படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதாக சொல்லி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
"தற்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இது போன்ற சமயத்தில் அவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த திரைப்படம் இப்போது வெளிவந்தால் பிரச்சனை ஏற்படும்.
அதனால், அந்த திரைப்படத்தை வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்," என அந்த கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும் குவைத்திலும் 'பீஸ்ட்' படம் சென்சார் ஆகாமல் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. இந்த மாதம் 13ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் இந்த வெளியாக இருக்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், ரெடின் ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் இருந்து 'அரபிக்குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்










Click it and Unblock the Notifications