பிக்பாஸ் சீசன் 6: கடும் விமர்சனங்களை கடந்து அசீம் வெற்றி சாத்தியமானது எப்படி?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார். சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவினுக்கு சமூக ஊடகங்களில் அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அசீமின் வெற்றி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.
பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு எழுந்தது. அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வந்த சீசன்களும் வெகுஜன பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வந்தது. திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், மாடல்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தவர்கள் எனப் பல்வேறு வகையிலான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிகாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொதுவாக 100 நாட்கள் வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் நிகழ்வுகள், போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்படும் போட்டிகள், எவிக்ஷன் முறைகள், அவர்களுக்கிடையே நிகழும் சண்டைகள் என்று பார்வையாளர்களுக்குப் பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும்.
தாங்கள் திரையில் காணும் பிரபலங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிவதற்கும் அவர்களின் கதைகளைக் கேட்பதற்கும் மக்களுக்கு இருக்கும் ஆர்வமே ஒவ்வொரு சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதும், அதேபோல் மற்ற சில போட்டியாளர்கள் எதிர்மறையான தங்களின் செயல்பாடுகளின் மூலம் அந்த சீசன் முழுவதும் பேசுபொருள் ஆவதும் வழக்கம்.
தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் வெற்றி பெற்றுள்ள போட்டியாளர் அசீம் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். இவருடைய வெற்றி தற்போது சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளாகியிருப்பதற்கும் அதுவே காரணம்.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் சக போட்டியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் முக சுழிப்பை ஏற்படுத்தி வந்தவர் அசீம். தன்னுடைய செயல்பாடுகளுக்காக நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலிடமும் பல அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் அவ்வப்போது பெற்று வந்தார்.
அதேபோல் இறுதிச்சுற்று வரை வந்த சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின் ஆகியோர் மக்களிடையே தொடர்ந்து ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று வந்தனர். ஆனால் தற்போது இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டிருப்பது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பெரும் திருப்புனையாக அமைந்துள்ளது என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 6 குறித்த கருத்துகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன. விஜய் டிவியை புறக்கணிப்போம் என்ற (#Boycottvijaytv) ஹேஷ்டேக் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக போட்டியாளர் விக்ரமனை ஆதரித்துப் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அறம் வெல்லும் எனக் கூறி மிகவும் நேர்மையான விளையாட்டையும் கண்ணியமான நடவடிக்கைகளையும் கடைபிடித்து முற்போக்கான கருத்துகளைத் தெரிவித்து வந்த விக்ரமனை தோற்கடித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல், போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.
https://mobile.twitter.com/007Kannadasan/status/1617325562846154752
அதேபோல் அசீமை வெற்றிபெறச் செய்து தமிழ் சமூகத்தை மிகவும் பிற்போக்கான நிலைக்கு அழைத்துச் செல்ல விஜய் டிவி முயன்றுள்ளது எனவும் ஒரு மனிதன் எப்படி வளரக்கூடாது என்பதற்குச் சான்றாக அசீமை சொல்லலாம் எனவும் மக்கள் ட்வீட் செய்கின்றனர்.
அதில் 'abuserazeem, clownazeem’ போன்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன. அசீமை வெற்றியாளராக அறிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன்கூட பெரிதாக எந்தவொரு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
https://mobile.twitter.com/ChristyDetta/status/1617330674771402753
https://mobile.twitter.com/IlamBodhi_PY/status/1617219352247570432
அசீமிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது எப்படி?
இந்த சீசன் முழுவதும் சக போட்டியாளார்கள் மீது அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்தியது, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியது, கமல்ஹாசனின் அறிவுரைகளைப் பெற்ற பின் உடனடியாக மனம் திருந்தி போட்டியாளர்களிடம் அதற்கு மன்னிப்பு கேட்பது என தன்னுடைய ஒவ்வொரு செயல்களின் மூலமும் தொடர்ந்து கவனம் பெற்று வந்தார் அசீம்.
ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகளில்கூட அதிகளவு இடம்பெற்றிருந்தது அசீம் மட்டுமே. விக்ரமன், ஷிவின் உட்பட எத்தனையோ போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான மொத்த சுவாரஸ்யத்தையும் அளித்தது அசீம் தான் என அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகளின் அடிப்படையில் மட்டும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்றும் வெகுஜன தொலைக்காட்சி பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது அசீம் தான் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
https://twitter.com/AbdulThamis_B/status/1616902237212807170
அசீம் இல்லாமல் பிக்பாஸ் சீசன் 6 மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்காது எனக் கூறும் அவருடைய ஆதரவாளர்கள், "அசீமின் வெளிப்படையான பேச்சும் கோபமும் செயல்பாடுகளும்தான் இந்த சீசனுக்கான பார்வையாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்தது, உண்மையான ஆட்ட நாயகன் அசீம் தான்" என்று கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுடைய வாக்குகளை அடிப்படையாக வைத்தே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் என நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியின்போது நடக்கும் எவிக்ஷன் முறைகளிலும் இறுதிச்சுற்றில் வெற்றியாளர்களை அறிவிப்பதிலும் மக்களின் வாக்குகள்தான் பெரும்பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு சீசன்களிலும் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் என்று முடிவுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வாக்கெடுப்புகளில் முறைகேடுகளாலேயே அசீம் வெற்றி பெற்றுள்ளார் என்ற கருத்துகள் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications