2014ம் ஆண்டு 20 அரசு விடுமுறைகள்... 'பொங்கலுக்கு 'பல்க்' லீவு எடுக்க வாய்ப்பு..!!
சென்னை: 2014ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு பெரும்பாலான அரசு விடுமுறைகள் சனி, ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறை நாட்களில் வந்தன.
ஆனால் இந்த முறை பெரும்பாலான விடுமுறைகள் வாரத்திற்கு நடுவில் வருவதால் அரசு ஊழியர்கள், மாணவ, மாணவியருக்கு சற்றே ஆறுதல் தரும் என்று நம்பலாம்.

மொத்தம் 20 நாட்கள் லீவுப்பா...
2014ம் ஆண்டு மொத்தம் 20 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீவு பட்டியலை வெளியிட்ட ஷீலா
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் விடுமுறை தினப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 1...லீவு
ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டுக்கு அரசு விடுமுறையாகும்.

பொங்கலுக்கு 3 நாள் லீவு
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை விடுமுறையாகும்.

ஆனா நாங்க 'பல்க்'கா எடுப்போம்ல...!
ஆனால் இந்த 3 நாள் விடுமுறையை அப்படியே பல்க்காக விரிவாக்கி பெரிய லெவலில் எடுக்கும் வாய்ப்புகள் ஏகபோகமாக உள்ளன.

அது எப்படின்னா...?
14ம் தேதி செவ்வாய்க்கிழமை... எனவே 13ம் தேதி லீவு போட்டால், நான்கு நாள் லீவாக மாறும். கடைசியில் வெள்ளிக்கிழமையை மட்டும் ஏன் விடனும் என்று அன்றைக்கும் சேர்த்துப் போட்டால்... அப்படியே ஒட்டுக்காகக அந்த வாரத்தையே சிறப்பாக விழா கொண்டாடி சிறப்பித்து விடலாம்.. அதாவது 19ம் தேதி வரை. மொத்தம் 7 நாள் வருகிறது.

அட, எங்க கணக்கு 9 நாளப்பு...!
இன்னும் சில, பலே பாண்டியர்கள் 11ம் தேதி முதலே எஸ்கேப் ஆகி விடும் வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் 9 நாள் அமர்க்களமாக பொங்கலைச் சிறப்பிக்க முடியும்...

ஞாயிற்றுக்கிழமையில் குடியரசு தினம்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம். இது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மார்ச் 31ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்புக்கு விடுமுறை.

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டுக்கு விடுமுறை
ஏப்ரல் 13ம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கும், 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கும் விடுமுறையாகும். இதில் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது... நல்லவேளை தமிழ் தப்பித்தது.

மே தினம்
ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளிக்கும், மே 1 மே தினத்தையொட்டியும் விடுமுறையாகும்.

ஜூலை 29ல் ரம்ஜான்
ஜூலை 29ம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு அரசு விடுமுறையாகும். ஆகஸ்ட் 15ம் தேதி , 17 ஆகிய நாட்களும் அரசு விடுமுறையாகும். 17ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை வருகிறது.. ஆகஸ்ட் 15 என்ன நாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஞாயிற்றுக்கிழமை வரும் பக்ரீத்
ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, அக்டோபர் 3 விஜயதசமிக்கு விடுமுறை. அக்டோபர் 5ம் தேதி பக்ரீத். அன்று ஞாயிற்றுக்கிழமையாகும்.

தீபாவளிக்கு அக்டோபர் 22ல் விடுமுறை
தீபாவளி பண்டிகை அடுத்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி வருகிறது. அன்று அரசு விடுமுறையாகும். வழக்கம் போல முன்னாலும், பின்னாலும் லீவு போட்டுக் கிளம்பி விடுவார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications