பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
காலைப் பொழுது
தொடர்ச்சி
வன்னச்சுடர் மிகுந்த வானகத்தே தென் றிசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம் வரக் கண்டதங்கே. (6)
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே. (7)
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர் கிளை மேல் (8)
வீற்றிருந்தே கிக் கீக்கீ ! காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவதென்ன? (9)
என்றவுடனே காக்கை - என் தோழா! நீ கேளாய்
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகின்றேன் (10)
(தொடரும்)












Click it and Unblock the Notifications