பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக.
பெருமைத் தலங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துச் தேவர் வயிற்றிலே தீப்பாய.
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட
நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்நகரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே
நான்முகனார் நாவடைக்க, நாமகட்துப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திட,
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி நன்வதனம் செம்மைபோய்க் காரடைய
மாதேவன் யோகம் மதிமயக்கு மாகிவிட-
வாலை, உமாதேவி ,மாகாளி, வீறுடையாள்
மூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்(தொடரும்)ஞீடிதி?>












Click it and Unblock the Notifications