பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
துச்சா தனன் எழுந்தே - அன்னை
துகிலினை மன் றிடை யுரித லுற்றான்.
அச்சோ, தேவர்களே! - என்று
அலறி அவ் விதுரனுந் தரைசாய்ந் தான்.
பிச்சே றியவனைப் போல் - அந்தப்
பேயனுந் துகிலினை உரிகை யிலே
உட்சோ தியிற் கலந்தாள்; - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள். (88)
ஹரி, ஹரி, ஹரி என்றாள்; - கண்ணா,
அபய மபய முனக் கபய மென் றாள்,
கரியினுக் கருள்புரிந்தே - அன்று
கயத்திடை முதலையின் உயிர்மடித் தாய்!
கரிய நன்னிற முடையாய்! - அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந் தாய்!
பெரியதோர் பொருளா வாய்! - கண்ணா
பேசரும் பழமறைப் பொருளா வாய்! (89) (தொடரும்...)
(தொடரும்)












Click it and Unblock the Notifications