பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
சக்கர மேந்தி நின்றாய்! - கண்ணா!
சார்ங்கமென் றொருவில்லை கரத்துடையாய்!
அட்சரப் பொருளா வாய்! - கண்ணா
அக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், - கண்ணா;
தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காகப் பாய், - அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். (90)
வானத்துள் வானா வாய், - தீ
மண், நீர், காற்றினில் அவையா வாய்;
மோனத்துள் வீழ்ந்திருப் பார் - தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்!
கானத்துப் பொய்கை யிலே - தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்.
தானத்து ஸ்ரீ தேவி, அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்! (91)
(தொடரும்)












Click it and Unblock the Notifications