For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

வாக்கினுக் கீச னையும் - நின்றன்
வாக்கினி லசைத்திடும் வலிமையி னாய்,
ஆக்கினை கரத்துடை யாய் - என்றன்
அன்புடை எந்தை! என் னருட்கட லே!
நோக்கினிற் கதிருடை யாய்! - இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த் தருளி வாய்!
தேக்குநல் வானமு தே! - இங்கு
சிற்றிடை யாச்சி யில் வெண்ணெய் உண்டாய்! (94)


வையகம் காத்திடு வாய்! - கண்ணா!
மணிவண்ணா என்றன் மனச் சுடரே!
ஐய, நின் பதமலரே -சரண்
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, - என்றாள் ;
பொய்யர்த்ந் துயரினைப் போல் - நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்,
தையலர் கருணையைப் போல் - கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல். (95)


பெண்ணொளி வாழ்த்திடு வார்- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்
கண்ண பிரானரு ளால் - தம்பி
சுழற்றிடச் சுழற்றிடத் துணியுதி தாய்
வண்ணப்பொற் சேலைக ளாம்- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன வே!
எண்ணத் திலடங்கா வே- அவை
எத்தனை எத்தனை நிறத்தன வோ! (96)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X