For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
பெண்கள் விடுதலைக் கும்மி
(தொடர்ச்சி)
3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி! (கும்மி)
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி! (கும்மி)
4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார், அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)
5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்தி திப்பெண்ணை கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]