For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

பொன்னிழை பட்டிழை யும் - பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமை களாய்
சென்னியிற் கைகுவித் தாள் - அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே.
முன்னிய ஹரிநா மம் - தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் - கண்டு
தொழும்பந் துச்சாதனன் வீழ்ந்து விட்டான். (97)


தேவர்கள் பூச்சொரிந் தார் - ஓம்
ஜெயஜெய பாரத சக்தி என்றே
ஆவலோ டெழுந்து நின்று முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழு தான்
சாவடி மறவரெல்லாம் -ஓம்
சக்தி சக்தி சக்தி என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான் -கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். (98)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X