பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மறவன் பாட்டு
மண்வெட்டிய கூலிதின லாச்சே - எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே! - இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே! (1)
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்ற புகழ் போச்சே! - இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே! (1)
நாணிலகு வில்லினொடு தூணி - நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு, - நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு. (2)
கன்னங் கரியவிருள் நேரம் - அதில்
காற்றும் பெருமழையும் சேரும்:
சின்னக் காரியதுணி யாலே - எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போல்ே. (3)
(தொடரும்)












Click it and Unblock the Notifications