பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)இன்பமுந் துன்பமும் பூமியின் - மிசை
யார்க்கும் வருவது கண்டனம் - எனில்
மன்பதை காக்கும் அரசர் தாம் - அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ?- அதை
அன்புந் தவமுஞ் சிறந்துளார் - தலை
யந்தனர் வினாவினை மீட்டும் போய்ச் - சொல்லி
முற்றுந் தெளிவுறத் கேட்டுவா (54)
என்றந்தப் பாண்டவர் தேவி யும் - சொல்ல,
என்செய்வன் ஏழையப்பா கனே?- என்னைக்
கொன்றுவிட்டாலும் பெரிதில்லை - இவள்
கூறும் வினாவிற் கவர் விடை தரி
னன்றி இவளை மறுமுறை - வந்து
அழைத்திட நானங் கிசைந்திடேன் - (என)
நன்று மனத்திடைக் கொண்டவன் - சபை
நண்ணி நிகழ்ந்தது கூறி னான். (55)
(தொடரும்)












Click it and Unblock the Notifications