For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

7.காலனுக்கு உரைத்தல்

ராகம் - சக்ரவாகம்

தாளம் - ஆதி

பல்லவி

    காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்

    காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் - அட ( காலா)

    சரணங்கள்


    1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல

    வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் -ஆதி

    மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்

    முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே? அட (காலா)


    2. ஆலாலமுண்டவனடி சரணென்ற- மார்க்கண்டன் - தன

    தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் -இங்கு

    நாலாயிரம் காதம் விட்டகல்! உனை விதிக்கிறேன் - ஹரி

    நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் - அட (காலா)

    (தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X