பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
அவள் இகழ்ந்திடாளோ! - அந்த
ஆயன் பேசு வானோ:
கவலை தீர்த்து வைப்போம்: - மேலே
களி நடக்கு கென்றான்
இவள வான பின்னும் - இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்
துவளும் நெஞ்சின ராய் - வதனம்
தொங்க வீற் றிருந்தார் (22)


வீமன் மூச்சு விட்டான் -முழையில்
வெய்ய நாம் போலே;
காம னொத்த பார்த்தேன் - வதனக்
களை இழந்து விட்டான்
நேமமிக்க நகுலன் - ஐயோ!
நினை வயர்ந்து விட்டான்
ஊமை போலிருந் தான் - பின்னோன்
உண்மை முற்றுணர்ந் தான். (23)


கங்கை மைந்தனங்கே - நெஞ்சம்
கன லுறத் துடித்தான்
பொங்கு வெஞ் சினத்தால் -அரசர்
புகை யுயிர்த் திருந்தார்
அங்கம் நொந்து விட்டான் - விதுரன்
அல்ல மெய்தி விட்டான்
சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ்
செய்தி காண லுற்றே. (24)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+