பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
சந்திரமதி
பச்சைக் குழந்தையடி - கண்ணிற்
பாவையடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது - என்றன்
இருவிழிக்குத்தே நிலவு
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ள தென்பார்!
துச்சப்படு நெஞ்சிலே - நின்றன்
சோதி வளரு தடீ! (1)
பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயையடி! - என்றன்
ஆசைக் குமரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தே னடி! (2)
நீலக் கடலினிலே - நின்றன்
நீண்ட குழல் தோன்று தடி!
கோல மதியினிலே -நின்றன்
குளிர்ந்த முகங் காணு தடி!
ஞால வெளியினிலே - நின்றன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினிலே - நின்றன்
காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தையடி) (3)
(தொடரும்)
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications