பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
காலைப் பொழுது
காலைப் பொழுதினிலே கண் விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே. (1)
கீழ்த்தி சையில் ஞாயிறு தான் கேடில் சுடர் விடுத்தான்
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னிற்றே . (2)
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே. (3)
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோடோர் காகம்
வன்னமுற வீற்றிருந்து வானை முத்தமிட்டதுவே. (4)
தென்னைப் பசுங்கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே. (5)
(தொடரும்)












Click it and Unblock the Notifications