பாரதி பக்கம்
15, பக்தி
பல்லவி
மதியினாலே - தெய்வ - பக்தியினாலே
சரணங்கள்
- 1, பக்தியினாலே - இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தநந் தெளியும் - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)
2. காமப் பிசாசைக் - குதி
கால்கொண்டடித்து விழுந்திடலாகும்
தாமசப் பேயைக் - கண்டுத்
தாக்கி மடிந்திட லாகும் ; எந்நேரமும்
தீமையை எண்ணி - அஞ்சுத்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம் - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம் கெட்ட
பாச மறுப்போம்- இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் - உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி - இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் (பக்தி)
4. சோர்வுகள் போகும், - பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம் பெறலாகும், நற்
பார்வைகள் தோன்றும் - மிடிப்
பாம்பு கடித்த விஷமதன் றேநல்ல
சேர்வைகள் சேரும் - பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்.
தீர்வைகள் தீரும் - பிணி
தீரூம், பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications