முகத்தில் தெளித்த சாரல்...
கீழே செல்ல செல்ல
மேலே போகிறது வால்
ஒரு திமிங்கிலம்
A Whale
Down it goes and more and more
up goes its tail
BUSON, YOSA.
திமிங்கலத்திற்குப் பொருந்துவது மீனுக்கும் பொருந்தும்.
திமிங்கலம் என்பது சக்தியைக் குறிக்கிறது.
திமிங்கிலத்தின் தலை கீழே போகப் போக
வால் மேலே வருகிறது-
திமிங்கிலம் தான் என்று இல்லை-
நிர்வாகிகளும் அப்படித்தான்-
அதிகாரமும் அப்படித்தான்.
தலை பணிவாக இருக்கின்றது-
வால் துள்ளுகிறன.
அது மட்டுமல்ல -
தலை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் வால்மேலே வர வாய்ப்பில்லை-
சில நேரங்களில்
நல்ல விஷயங்கள் சொல்லப்படாததாலேயே
தீயவிஷயங்கள் முன் நிற்கின்றன-
நல்ல மனிதர்கள் வெளிச்சத்திற்கு வர கூச்சப்படுவதாலேயே
எடுபிடிகளாக இருக்க வேண்டியவர்கள்
கெடிபிடி செய்கிறார்கள்.
உண்மைகள் உரத்துச் சொல்லப்பட வேண்டும்-
இல்லாவிட்டால் பொய்களின் நாட்டியத்தின் இரைச்சலில்
உண்மை நாடு கடத்தப்படும்.
தலை சிந்தனைக்குப் பிறப்பிடம்-
வால் கழிவுகளுக்கு அருகில் இருப்பிடம்-
வாலும் தேவையான உறுப்புதான்-
ஆனால் நிச்சயம் தலையின் பணியை அது செய்ய முடியாது.
பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில்
வால் மறைந்து போகிறது-
மறைந்து போக வேண்டும்-
இருக்கிறதே என்று எல்லா நேரமும் வாலை
உயர்த்திக் கொண்டோ
உபயோகப் படுத்திக் கொண்டோ இருக்க முடியாது.
பல்லியின்
வாலை நறுக்கினால்
அது துள்ளிக் கொண்டே இருக்கிறது-
தலையை நறுக்கினால் அது சப்தமில்லாமல் மவுனித்திருக்கிறது.
வாலை தண்டித்தால் ...
அது கத்தும்; துள்ளும்; கூச்சலிடும்-
தலையோ தான் தண்டிக்கப்பட்ட காரணங்களை
அலசி ஆராயும்.
திறமை மிகுந்தவர்கள் எல்லாரும்
மவுனத்தை அடைகாக்க ஆரம்பித்து விட்டார்கள்-
அதனால் இப்போது அரைகுறைகளின் சத்த சாம்ராஜ்யம்
நடந்து கொண்டிருக்கிறது.
ஊதுவத்திகள் மவுனமாக இருக்கின்றன-
மெழுகுவர்த்திகள் அமைதியை அடைகாக்கின்றன-
வால்களுக்கு இருக்கும் பேராசையெல்லாம்
அவை சிறந்த வாலாக இருக்க வேண்டும் என்பதல்ல-
அவையே தலையாகத் தன்னைப் பார்த்துக் கொள்வதால்
வால்களெல்லாம் ஒன்று சேர்ந்து
தீர்மானம் போடாலாம்
இனி தலைகளை எண்ணுவதை எதிர்த்து
வால்களை எண்ண வற்புறுத்துவோம்
தலைமை என்பதை ஒழித்து
வால்மை என்று கொண்டு வருவோம்
வால்களின் எண்ணிக்கை அதிகம் -
அவற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி
சரியான நேரத்தில் அவற்றை உதிர்ப்பது ஒன்றே ...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications