முகத்தில் தெளித்த சாரல்...
மவுனத்தைக் கலைப்பதைக் தவிர
ஐம்புலன்களும் பின்னிப் பினைந்தவை .
ஒரு புலனைத் தீவிரப்படுத்தி திசை திருப்பும் போது
இன்னொரு புலன் மங்கி வருகிறது.
விரும்பாத ஒன்று விழுகிற போது
ஒரு புலனை ஆக்கிரமித்து
மற்ற புலன்களை மந்தமாக்குவது இயல்பு-
அதனால்தான்
கண்கள் தடையாயிருக்கக்கூடாதே என்று
இமைகளை மூடி இசையை ரசிக்கிறோம்.
வாசனையை முகரும் போது
கண்களை மூடி மூச்சிழுக்கிறோம்.
மணியோசைகளை இருந்தவரை
மலர்வாசனை தெரியவில்லை.
ஓசையெனும் இரும்புக்கரம்
மலர்களின் குரல்வளையை நெருக்கியதால்
வாசனையை மூச்சுவிட முடியாமல் அவை திணறின-
உண்மைதான்!
செயற்கை வெளிச்சத்தில்
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம் தெரியாமல் போய்வருகின்றன.
ஒருவழியாக மணியோசை நின்று விட்டது.
இப்போது தான் கவனப்பிசகு இல்லாமல், சிந்தனை சிதறாமல்
மலர் வாசனையை நுகர முடியாது.
இது ஒரு பூரணமான மாலைப் பொழுதாக பரிமளிக்கிறது.
மலர்களின் மணத்தை நுகருவது
மணியை ஒலிப்பதிலும் அழகாக
இறைமைக்குச் செய்கிற மரியாதை
ஓடிவரும் தென்றலின் இழுப்பில் உட்காரும்
பூ வாசனையில் திளைத்து விழிகளை மூடி
தன்னை ஒவ்வொரு துளியாக இழுப்பதும்
இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் கரைத்துக் கொள்வதிலுமா
மணியோசை பெரிய வழிபாட்டுச் சின்னம்.
காத்திருப்போம்.................
.மணியோசைகள் எல்லாம் மறையட்டும்
மலர்களின் நறுமணம் மட்டும் மீதப்படும்.
நமது மனதுக்குள் இருக்கும் ஓசைகள் எல்லாம் அடங்கட்டும்.
நமக்குள் இருக்கும் தெய்வீக மணம் வெளியே கிளம்பும்.
அது பூரணமான மாலைப் பொழுதாய்ப் புறப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications