பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
காலைப் பொழுது
(தொடர்ச்சி)
என்று சொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கனோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே. (11)
நட்புக் குருவியே, ஞாயிற் றின் வெயிலில்
கட்புலனுக் கெல்லாம் கனியாதச் தோன்றுகையில், (12)
நும்மை மகிழ்ச்சியுடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மாவோ! காசுப் பெருங்கூட்ட மஃதென்னே? (13)
என்று வினவக் குருவிதான இஃதுரைக்கும் -
நன்று நீ கேட்டாய், பசுங்கிளியே ! நானுமிங்கு (14)
மற்றதனை யோர்ந்திடவே காக்கயிைடம் வந்திட்டேன்:
கற்றறிந்த காக்காய், கழறுக நீ! என்றதுவே (15)
(தொடரும்)












Click it and Unblock the Notifications