கட்சி ஆரம்பித்த எழுத்தாளர் கமலா தாஸ்
கொச்சி:
இந்து மதத்திலிருந்து முஸ்லீமாக மாறி பரபரப்பூட்டிய பிரபல எழுத்தாளர் கமலா தாஸ் என்ற சுரையா, புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளார். தனதுகட்சிக்கு லோக் சேவா கட்சி என்று பெயர் வைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாதவிக் குட்டி என்ற கமலா தாஸ், பிரபல எழுத்தாளர். சமீபத்தில் அவர் முஸ்லீமாக மாறினார். சுரையா என்ற பெயரையும்சூட்டிக் கொண்டார். இப்போது கட்சி துவக்கியுள்ளார்.
தனது கட்சி அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார் சுரையா. நாங்கள்தான் அடுத்து ஆட்சியமைப்போம் என்றும்கூறுகிறார் அவர்.
கேரள அரசியல் தலைவர்களின் அலங்கோல அரசியலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பட்டினிச் சாவுகள், நோய்களால் சாவோரைக் காக்க எந்தத்தலைவரும் கேரளத்தில் இல்லை. இதற்காகவே நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். அன்பு, தியாகம், சேவை ஆகியவையே எனது கட்சியின் தாரகமந்திரங்களாகும்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எனது கட்சியின் கிளைகளை அமைக்கவுள்ளேன்.
அடுத்த தேர்தலில் நானும் போட்டியிடுவேன். எனது வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள். ஒருவேளை நாங்கள் தோற்று விட்டால், அது உண்மையின்தோல்வியாகும் என்றார் அவர்.
1984- ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட கமலா தாஸ், 1700 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications