குடும்ப அரசியல் நடத்துகிறார் ராமதாஸ் .. வாழப்பாடி
சென்னை:
குடும்ப அரசியல் நடத்தி கேவலமான பிழைப்பு நடத்துகிறார் ராமதாஸ் என்று வன்னியர் சங்க மாநாட்டில் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடந்த வன்னியர்சங்க மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திபேசியதாவது:
இந்தியாவில் முதன் முதலில் ஜாதிச் சங்கத்தை அமைத்தவர்கள் வன்னியர்கள்தான். அதற்குப்பின் பல சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வன்னியர் சங்கத்திற்குப்பின் 40 ஆண்டுகள் கழித்து நாடார் மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது. நாடார் சமுதாய சங்கங்களின் ஒற்றுமையாலும், தியாகத்தாலும் இன்று கற்பகவிருட்சமாக வளர்ந்துள்ளது.
பித்தலாட்டம் செய்யும் ராமதாஸ் போன்றவர்களை அவர்கள் கண்டு கொள்ளாததால்தான் நாடார் மகாஜன சங்கம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
2001 ல் பாண்டிச்சேரியிலும், 2006 ல் தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்பேன் என்று உளறிக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். ஜெயலலிதாவிடமும்,கருணாநிதியிடமும் சீட்டுப் பேரம் நடத்தி அரசியல் நடத்துகிறார் ராமதாஸ் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications