பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன் இவ்வுரை கூறுதல் கேட்டே
நூல்வி லக்கிய செய்கைக ளஞ்சும்
நோன்பி னோனுளம் நொந்திவை கூறும்
தேவ லப்பெயர் மாமுனி வோனும்
செய்ய கேள்வி அசிதனும் முன்னர்
காவ லர்க்கு விதித்த தந்நூலிற்
கவறும் நஞ்செனக் கூறினர், கண்டாய்! (171)
வஞ்ச கத்தினில் வெற்றியை வேண்டார்
மாயச் சூதைப்பழியெனக் கொள்வார்
அஞ்ச லின்றிச் சமர்க்களத் தேறி
ஆக்கும் வெற்றி அதனை மதிப்பார்
துஞ்ச நேரினுந் தூயசொல் லன்றிச்
சொல்மி லேச்சரைப் போலென்றுஞ் சொல்லார்
மிஞ்சு சீர்த்திகொள் பாரத நாட்டில்
மேவு மாரியார் என்றனர் மேலோர்! (172)
(தொடரும்)












Click it and Unblock the Notifications